news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தமிழ் இனப்­ப­டு­கொ­லையின் எதிர்­வி­ளைவு

02 Aug, 2026
கறுப்பு ஜூலை இனப்­ப­டு­கொ­லையின் 43ஆவது ஆண்டு நினை­வேந்தல் முன்­னெ­டுக்­கப்­பட்ட தரு­ணத்தில், பிரித்­தா­னிய அமைச்­ச­ர­வையில்  இள­நிலை அமைச்­ச­ராக ஈழத்­தமிழ் பெண் ஒருவர் இடம்­பெறும் வாய்ப்பு கிடைத்­தி­ருக்­கி­றது. பிரித்­தா­னி­யாவில் புதிய பிர­த­ம­ராக பொறுப்­பேற்ற அன்டி பர்ன்ஹாம் தனது அர­சாங்­கத்தின் இணை அமைச்­சர்­களின் பட்­டி­யலை வெளி­யிட்ட போது பல­ருக்கும் ஆச்­ச­ரியம் தான் ஏற்­பட்­டது

வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள எட் மிலிபாண்டின் கீழ், பாரா­ளு­மன்ற இணை அமைச்­ச­ராக உமா குமரன் நிய­மிக்­கப்­பட்­டதே அதற்குக் காரணம்.

பிரித்­தா­னிய வர­லாற்றில் ஈழத்­த­மிழர் ஒருவர் அமைச்சர் பத­விக்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது இதுவே முதல்­மு­றை­யாகும்.

உமா குமரன் முதல்­மு­றை­யாக- அண்­மை­யி­லேயே பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­கி­யி­ருந்தார்.

அவ­ருக்கு வெளி­வி­வ­கார அமைச்சின், பாரா­ளு­மன்ற இணை அமைச்­ச­ராக பொறுப்பு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.


இது வெளி­வி­வ­கார அமைச்சு தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் எழுப்­பப்­படும் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிப்­பது உள்­ளிட்ட பல்­வேறு முக்­கிய பொறுப்­புக்­களை உள்­ள­டக்­கிய ஒரு பதவி.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்­கையில் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொலை தமி­ழர்­களை பல்­வேறு நாடு­க­ளுக்கு புலம்­பெ­யர்ந்து செல்லும் நிலையை ஏற்­ப­டுத்­தி­யது.

இந்த புலம்­பெ­யர்தல் தற்­போதும் தொடர்ந்­தாலும் ஒப்­பீட்­ட­ளவில் கணி­ச­மாக குறைந்­தி­ருக்­கி­றது.

இலங்­கையில் சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்­தினால் தங்கள் வீடு­களை விட்டு, நிலங்­களை விட்டு விரட்­டி­ய­டிக்­கப்­பட்ட மக்கள், சொத்­துக்கள் சூறை­யா­டப்­பட்டு, அழிக்­கப்­பட்டு நிர்க்­க­தி­யாக்­கப்­பட்ட மக்கள், வெளி­நா­டு­களில் புக­லிடம் தேட நிர்­பந்­திக்­கப்­பட்­டார்கள். தமிழ் மக்­களை அடி­மை­க­ளாக்­கு­வ­தற்­காக -நாடற்­ற­வர்கள் ஆக்­கு­வ­தற்­காக- பொரு­ளா­தார ரீதியில் பல­மற்­ற­வர்கள்  ஆக்­கு­வ­தற்­காக, இன வன்­மு­றைகள் காலத்­திற்குக் காலம் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன.

அதனைத் தொடர்ந்து இடம்­பெற்ற போர், தமிழ் மக்­களின் பெரு­ம­ள­வி­லான புலம்­பெ­யர்­விற்கு வழி வகுத்­தி­ருந்­தது.

தமி­ழர்கள் ஆயுத பலத்தின் ஊடாக உரு­வாக்­கிய நிழல் அர­சையும், ஆயுதப் போராட்­டத்­தையும், 2009 ஆம் ஆண்டு, இலங்கை அரசு வெளி­நா­டு­களின் ஒத்­து­ழைப்­புடன் தோற்­க­டித்­தது.

இதற்குப் பின்னர் தமி­ழர்­க­ளுக்கு நியா­ய­மான அர­சியல் தீர்வு ஒன்றை வழங்­கு­வ­தாக அளித்த வாக்­கு­று­தியை, 17 ஆண்­டு­க­ளாக இலங்­கையின் ஆட்­சி­யா­ளர்கள் எவ­ருமே நிறை­வேற்­ற­வில்லை.

ஒவ்­வொ­ரு­வரும் ஒவ்­வொரு வாக்­கு­று­தி­யுடன் ஆட்­சிக்கு வரு­வதும், அதனை நிறை­வேற்­றாமல் வெளி­யே­று­வதும் இன்று வரை தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. கிட்­டத்­தட்ட தமி­ழர்­களை ஏமாற்­று­கின்ற தந்­திரம் சிங்­கள ஆட்­சி­யா­ளர்­களால் தொடர்ச்­சி­யாக கையா­ளப்­பட்டு வரு­கி­றது. தற்­போ­தைய ஆட்­சியும் அதற்கு விதி­வி­லக்­கா­னது அல்ல.

தமி­ழர்­க­ளுக்கு எந்­த­வொரு அதி­கா­ரப்­ப­கிர்­வையும் அர­சியல் தீர்­வையும் வழங்­கு­வ­தில்லை என்ற திட­மான நிலைப்­பாடு சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் இருக்­கி­றது என்­பதை இந்த இழுத்­த­டிப்பு தெளி­வாக உணர்த்தி நிற்­கி­றது. இந்தச் சூழலில் தான், புலம்­பெயர் சமூ­கத்தின் எழுச்சி முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது.

இலங்­கையை விட்டு புலம்­பெ­யர்ந்து சென்ற இலட்­சக்­க­ணக்­கான தமிழ் மக்கள், தாம் புலம்­பெ­யர்ந்து சென்ற நாடு­களில், தங்­களை நிலைப்­ப­டுத்த தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள். ஆரம்­பத்தில் பொரு­ளா­தார ரீதி­யாக தங்­களை வலுப்­ப­டுத்­து­வதில் மட்டும் கவனம் செலுத்­தி­ய­வர்கள், அடுத்த தலை­மு­றையை கல்வி ரீதி­யா­கவும் துறைசார் நிபு­ணத்­துவ ரீதி­யா­கவும் வளர்த்­தெ­டுப்­பதில் வெற்றி பெறத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

அதன் பெறு­பே­றா­கத்தான், இப்­பொ­ழுது புலம்­பெயர் தேசங்­களில் ஆட்சி அதி­கா­ரங்­களில் பங்­கெ­டுப்­ப­வர்­க­ளாக அவர்கள் மாறி வரு­கின்­றனர். கன­டாவில் நக­ராட்சி அர­சி­யலில் தொடங்­கிய பயணம், மாகாண அர­சி­யலில் இருந்து, இப்­போ­ழுது தேசிய அர­சியல் வரை முன்­னேற்றம் கண்­டி­ருக்­கி­றது.


கன­டாவின் பொது பாது­காப்பு அமைச்சர் பதவி, ஹரி ஆனந்­த­சங்­க­ரிக்கு வழங்­கப்­பட்­டது, அங்கு புலம்­பெயர் தமி­ழர்கள் எந்­த­ள­வுக்கு முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கி­றார்கள் என்­பதை உணர்த்­து­கி­றது.


அது­போல, இப்­போது, பிரித்­தா­னி­யாவில் வெளி­வி­வ­கார அமைச்சின் நாடா­ளு­மன்ற துணை அமைச்­ச­ராக உமா குமரன் பத­வி­யேற்­றி­ருக்­கிறார். இது போன்ற  மாற்­றங்கள் பல்­வேறு புலம்­பெயர் நாடு­களில் உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

அவுஸ்­ரே­லியா, ஜேர்­மனி, பிரான்ஸ், சுவிஸ், நோர்வே என்று பல நாடு­களில் உள்­ளூ­ராட்சி அமைப்­பு­களில் இருந்து அடுத்­த­டுத்த கட்ட அர­சியல் கட்­ட­மைப்­பு­களில் ஈழத்­த­மி­ழர்கள் கணி­ச­மாக பங்­கெ­டுத்த தொடங்கி இருக்­கி­றார்கள்.

அவுஸ்­ரே­லி­யாவில் மிச்சேல் ஆனந்­த­ராஜா செனட் உறுப்­பி­ன­ரா­கவும், அஷ்­வினி அம்­பி­கை­பாகர் தொழிற்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் இருக்­கின்­றனர்.

நியூ­ஸிலாந்து பாரா­ளு­மன்­றத்தில் வனுஷி  சீதாஞ்­சலி வால்டர்ஸ் உறுப்­பி­ன­ராக பத­வியில் இருக்­கிறார்.

கன­டாவில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­விக்கு ஜூவ­னிடா நாதன் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ள­துடன், ஒன்­ரா­றியோ மாகாண அமைச்­ச­ராக விஜய் தணி­கா­ச­லமும், மாகாண சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக லோகன் கண­ப­தியும் பதவி வகிக்­கின்­றன. நோர்­வேயில் ஹம்சி குண­ரத்­தினம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக உள்ளார்.

இது தவிர சுவிஸ் அர­சியல் கட்­ட­மைப்­பு­க­ளிலும் கணி­ச­மான ஈழத்­த­மி­ழர்கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளனர்.

புலம்­பெயர் நாடு­களின் அர­சி­யலில் தமி­ழர்­களை முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வர்­க­ளாக மாறத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

இந்த மாற்றம் ஒரு முக்­கி­ய­மான கட்டம். முன்னர் இலங்­கையில் தமி­ழர்கள் இனப்­ப­டு­கொலை செய்­யப்­பட்ட போதும், பல்­வேறு துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்ட போதும், நிலங்கள் அப­க­ரிக்­கப்­பட்ட போதும், அது­பற்­றிய குரல்­களை வெளி­யு­ல­கத்­திற்கு கொண்டு செல்­வ­தற்கு பல்­வேறு நெருக்­க­டிகள் காணப்­பட்­டன. பிரித்­தா­னிய பிர­த­ம­ருக்கு, கனே­டிய பிர­த­ம­ருக்கு ஒரு செய்­தியை எடுத்துச் சென்று சேர்ப்­ப­தற்கு பெரும் பாடு­பட வேண்­டிய ஒரு கால­கட்டம் இருந்­தது.

அதற்­காக பல நாட்கள் வாரங்கள் மாதங்கள் கூட காத்­தி­ருக்க வேண்­டிய நிலை முன்னர் இருந்­தது.

ஆனால், இப்­போது, இவர்­களின் காதுக்கு ஒரு செய்­தியை கொண்டு செல்­வ­தற்கு குறு­கிய நேரம் போதும்.

அந்­த­ள­விற்கு ஈழத் தமிழ் பிர­தி­நி­தித்­துவம் அந்­தந்த நாடு­களில் உள்­ளது.

புலம்­பெயர் தேசங்­களின் அர­சி­யலில் ஈழத் தமி­ழர்கள் செல்­வாக்குப் பெறு­வது இலங்கைத் தீவில் தமி­ழர்­களின் நிலை­மை­களில் உட­னடி மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி விடாது.

அப்­படி மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் என நம்­பினால் அது தவறு.

இங்கு தனி­நாட்­டையோ அல்­லது தனித்­து­வ­மான தீர்வு ஒன்­றையோ ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அவர்­களால் பங்­கேற்க முடி­யாது.

ஆனால், தமி­ழர்­க­ளுக்கு நியா­ய­மான அர­சியல் தீர்வை பெற்றுக் கொள்­வ­தற்­கான அழுத்­தங்­களை அந்­தந்த நாடு­களின் ஊடாக கொடுப்­ப­தற்கு,  இவ்­வா­றான பிர­தி­நி­தித்­து­வங்கள் முக்­கி­ய­மா­னவை.

இலங்கை அர­சாங்கம் தமி­ழர்­களை நாட்டை விட்டு வெளி­யேற்றி விட்டால் போதும், பிரச்­சினை தீர்ந்­தது என்று கரு­திய ஒரு காலம் இருந்­தது.

ஜே.ஆர்.ஜய­வர்­தன மற்றும் அவ­ருக்குப் பின்னர் ஆட்­சிக்கு வந்த ஆட்­சி­யா­ளர்­களின் அந்த பார்வை தவ­றா­னது என்­பதை, புலம்­பெயர் தேசங்­களில் செல்­வாக்கு பெற்று வரும் ஈழத் தமிழ் அர­சியல் உணர்த்தத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

பிற நாடு­களில் இது­போன்­ற­தொரு பலம், இலங்கை அர­சுக்கு கிடை­யாது.

பிரித்­தா­னிய அர­சி­யலில் ரணில் ஜய­வர்­தன என்ற ஒருவர் இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருந்தார். அவர் கடந்த தேர்­தலில் தோல்வி அடைந்து விட்டார்.

பிரித்­தா­னிய அர­சாங்க மட்­டத்தில், ஈழத் தமி­ழர்­களின் நிலையை எடுத்துக் கூறு­வ­தற்கு, பிர­தி­நிதி ஒருவர் இருக்­கிறார் என்­பது தனித்­து­வ­மான ஒரு பாது­காப்பு.

கனே­டிய பிர­த­ம­ருக்கு அருகே ஒரு தமிழ் அமைச்சர் இருக்­கிறார் என்­பது இன்னும் கூடு­த­லான பாது­காப்பு.

இது போல பல நாடு­களில் பல அர­சியல் தலை­வர்­க­ளுக்கு ஆலோ­ச­கர்­க­ளாக, அதி­கா­ரி­க­ளாக, இலங்கை தமிழ் இளைய தலை­முறை வளரத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

இது, தமி­ழர்­களை விரட்­டி­ய­டித்­த­வர்கள் எதிர்­பா­ராத ஒரு மாற்றம்.

சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் விரும்­பாத ஒரு மாற்றம்.

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்கு கையாண்ட  மலினத்தனமான முயற்சிகளின் எதிர்விளைவே இது.

இந்த விளைவை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை, விரும்பவும் இல்லை, ஆனால் இந்த யதார்த்தத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

உள்நாட்டு அரசியலில் வலுப்பெற முடியாமல் புறக்கணிக்கப்பட்ட, விரட்டியடிக்கப்பட்ட, ஈழத் தமிழ் சமூகம் பிறநாடுகளில் செல்வாக்குப் பெறுவதும் அரசாங்கத்தில் – அரசியலில் அதிகாரம் செலுத்துவதும் சிங்கள பௌத்த பேரினவாதம் செய்த நன்மை எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

போர் , இன வன்முறைகள் இல்லாமல் புலம்பெயர்தல் சாத்தியப்பட்டிருக்காது.

போரை தனியே பாதகமான விளைவாக மாத்திரம் பார்த்தவர்கள், அதற்கு பின்னால் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை, ஈழத்தமிழ் சமூகம் சர்வதேச அளவில் வியாபித்து வளர்ந்து வருவதை குறைத்து எடை போட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அடக்க நினைத்தவர்களுக்கு - அடங்க மறுப்பவர்களின் செய்தியாக, இந்த மாற்றத்தை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.


-கபில்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!