ஒரே குடும்பத்தில் 3 வேட்பாளர்கள்... ஆனால் 3 கட்சி சார்பில் போட்டி : தேர்தல் அரசியலில் சுவாரசியம் !
29 Mar, 2026
விஜய் கொடுத்த புகார்
இதைத் தொடர்ந்து இன்று இரவு 7:30 மணியளவில் டிஜிபி அலுவலகம் வந்த விஜய் பொன்ராஜூக்கு எதிராக புகார் மனு ஒன்றை வழங்கியிருக்கிறார்.
அதில், 'ஆளும் தி.மு.க.வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் திரு.பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவே பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.
தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் திரு.பொன்ராஜ் என்கிற இந்த நபர் ஆளும் கட்சியான தி.மு.க. தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைகடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.
இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.' எனக் கூறியிருக்கிறார்.
Comments
Leave a Reply
Write the comments...............