news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட அதிமுக

24 Mar, 2026
297 அறிவிப்புகள் கொண்ட அதிமுக தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். ஏற்கனவே 3 கட்டங்களாக அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்ட நிலையில் இன்று முழுமையான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் என்ன? • அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும். • நகரப்பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டமில்லா பேருந்து பயணம். • வீடில்லாத ஏழைகளுக்கு விலையில்லா கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். • மகளிருக்கு ரூ.25000 மானியத்தில் 5 லட்சம் மகளிருக்கு இரு சக்கர வாகனம். . • முதியோர் ஓய்வூதியம் ரூ. 2000 ஆக உயர்வு. • அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் • அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப்பெட்டி • அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு 7.5% லிருந்து 10% ஆக உயர்த்தப்படும். • மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக்கனை அரசே ஏற்கும். • ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்கள் உயிரிழக்க நேரிட்டால் குடும்பத்திற்கு 10 லட்சம். • தமிழ்நாட்டில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும். உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த 297 அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

Comments

Write the comments...............