ஒரே குடும்பத்தில் 3 வேட்பாளர்கள்... ஆனால் 3 கட்சி சார்பில் போட்டி : தேர்தல் அரசியலில் சுவாரசியம் !
29 Mar, 2026
எஸ்.வி.சேகரின் சர்ச்சைக்குரிய வீடியோவை பகிர்ந்துள்ள சின்மயி, அவரை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இதை பார்க்கையில், தூத்துக்குடி விளாத்திக்குளத்தில் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண், ஏன் வனப்பகுதியில் உள்ள புதர்களுக்கு பின்னால் சென்றார் என்று எஸ்.வி.சேகர் கேட்பது போல் தெரிகிறது என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், காவல்துறையினால் புதருக்கு லைட் போட முடியுமா என இவர் பேசியிருப்பதை அடிக்கோடிடும் அவர், கழிவறைகள் மற்றும் குளியலறைகள் இல்லாத இந்த ஊரில், அந்த பெண் தனியாக இயற்கை உபாதையை கழிக்க சென்றதாக கூறப்படுவதாக குறிப்பிட்டார். மேலும், இளம் பெண்களும், சிறுமிகளும் இயற்கை உபாதையை கழிக்க செல்லும் போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது சர்வ சாதாரணம் ஆகி விட்டதாகவும், ஆனால் இது போன்ற எந்த வித அச்சமும் இன்றி விரும்பும் போதெல்லாம் பாதுகாப்பாக ஆடையின் ஜிப்பை கழற்றி சிறுநீர் கழிக்கக்கூடிய ஆண்களால், இதனை ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது என்று பதிவிட்டிருக்கிறார். இந்த போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/5OIS7OOoV9
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) March 26, 2026
விளாத்திகுளம் பிரச்சனை பற்றி கனிமொழி கூறியது:
12ம்வகுப்பு பள்ளி கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வகையில் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தரப்படும் - கனிமொழி எம்பி உறுதி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் 12ம்வகுப்பு பள்ளி மாணவி இயற்கை உபாதை கழிக்க கடந்த பத்தாம் தேதி வெளியே சென்ற போது, மயமானார்.
மறுநாள் 11ந்தேதி அப்பகுதியில் பாலியல் வன்கொடுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 19 ந்தேதி இந்த கொலை வழக்கு தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த மாவீரன் (எ) தர்மமூனிஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
இதையெடுத்து உடலை வாங்காமல் போராட்டத்தை ஈடுபட்டிருந்த மாணவியின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர் போராட்டத்தை கைவிட்டு 20ந்தேதி மாணவியின் உடலை பெற்று, தகனம் செய்தனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி குடும்பத்திற்கு கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தனர். குற்றவாளிக்கு உட்சபட்ச தண்டனை வாங்கி தரப்படும். உங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்போம், கொலை செய்யப்பட்ட மாணவியின் சகோதரி கல்வி செலவு மற்றும் வேலைக்கான அனைத்து உதவியும் செய்வோம். தைரியமாக இருங்கள் என்று மாணவியின் குடும்ப த்தினருக்கு கனிமொழி எம்பி ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து கனிமொழி எம். பி. செய்தியாளர்களிடம் பேசுகையில் பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் குடும்பத்திற்கு மன நிம்மதி தரும் வகையில் ஒரு சிறிய அமைதியை கொடுக்கும் வகையில் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளனர். நிச்சயமாக இப்படிப்பட்ட குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உட்சபட்ச தண்டனை வாங்கித் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு , அந்த குற்றவாளிக்கு, அந்த பெண்ணிற்கு நியாயம் கிடைக்கும் வகையில் ஒரு தண்டனை வாங்கி தரப்படும். இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்கு சட்டங்கள் இருக்கிறது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அந்த சட்டங்கள் செயல் படுத்தப்படும் என்றார்.விளாத்திகுளம் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து ஒருத்தன் கொன்னுட்டான். அந்த பொண்ணு எதுக்கு புதர் பின்னாடி போச்சுன்னு கேக்குறான் இந்த திமுக ஆதரவாளர். pic.twitter.com/Pwf7myAR4g
— Krishna Kumar Murugan (@ikkmurugan) March 26, 2026
Comments
Leave a Reply
Write the comments...............