ஈழத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர் திருவிழா இன்று (27) பெருமளவான பக்தர்களின் விண்ணதிர்ந்த அரோகரா கோசத்துடன் கோலாகலமாக இடம்பெற்றது.
அன்னதானக் கந்தன் என சிறப்பிக்கப்படும் முருகப்பெருமானுக்கு இன்று காலை முதல் விசேட பூசைகள் இடம்பெற்று முருகப்பெருமான் தேரிலே எழுந்தருளினார்.
ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13 ஆம் திகதி அதிகாலை 1:45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்தநிலையில் நேற்று (26) இரவு சப்பறத் திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்ற நிலையில், இன்று தேர்திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் நாளை (28) தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!