இரான் போரால்தான் குடியரசுக் கட்சி தோல்வியை சந்தித்தது' - ஜே.டி. வான்ஸ் கருத்துக்கு டிரம்ப் பதில் என்ன?
05 Nov, 2026
அலரிமாளிகையில் இன்று (26) இடம்பெற்ற அமைச்சர்களுக்கும் மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கும் இடையிலான சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக்கூடாது என மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த, தான் பதவி விலக போவதில்லை என்றும் அது குறித்து அச்சம் கொள்ள வேண்டம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாருக்காவது என்னை அனுப்ப முடியுமானால் அனுப்புங்கள்“ என்று தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தான் விரைவில் பதவி விலகப் போவதில்லை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
தன்னை பதவி விலகுமாறு ஒவ்வொருவராகக் கூறினாலும் இராஜினாமா செய்வதற்கு தான் தயாரில்லை எனவும் எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் காட்டினால் மாத்திரமே பதவி விலகத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற முன்னாள் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் இன்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளாார்.
எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்து மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், தற்போதுள்ள வரிசைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!