news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நீதித்­து­றையின் தீர்ப்பும் நிர்­வா­கத்தின் கறையும்

02 Aug, 2026
நாட்டின் நவீன சட்ட வர­லாற்றில் இது­வரை கண்­டி­ராத மிக அதிர்ச்­சி­க­ர­மான, அதே­வேளை வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை கொழும்பு மேல் நீதி­மன்றம் வழங்­கி­யுள்­ளது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்­பாகத் தங்­க­ளுக்கு முன்­கூட்­டியே உளவுத் தக­வல்கள் கிடைத்­தி­ருந்தும், தங்­களின் கட­மையை நிறை­வேற்­றத்­த­வறி, அதன் மூலம் 268 அப்­பாவிப் பொது­மக்­களின் கொலைக்கு உடந்­தை­யாக இருந்த குற்­றத்­துக்­காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர மற்றும் பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ ஆகிய இரு­வ­ருக்கும் மரண தண்­டனை விதித்துத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டின் வர­லாற்றில், பொலிஸ் துறையின் உச்சப் பத­வி­யான பொலிஸ் மா அதிபர் ஒரு­வ­ருக்கோ அல்­லது பாது­காப்­புத்­து­றையின் தலை­மை­யான பாது­காப்புச் செய­லாளர் ஒரு­வ­ருக்கோ மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருப்­பது இதுவே முதல் முறை­யாகும்.

அத்­துடன் 586 பேரின் கொலை முயற்­சிக்கு உடந்­தை­யாக இருந்­த­மைக்­கான 586 குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பிலும் இரு­வ­ருக்கும் தலா 12 ஆண்­டுகள் கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் உள்ள உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரிகள் யார், இதன் பின்­ன­ணியில் இருந்த அர­சியல் சதிகள் என்ன என்­பன போன்ற பல முடிச்­சுகள் இன்­னமும் அவிழ்க்­கப்­ப­டாத சூழலில் இந்தத் தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்­க­ளுக்கு மேன்­மு­றை­யீடு செய்­வ­தற்­கான வாய்ப்­புகள் சட்­டப்­பூர்­வ­மாக எஞ்­சி­யி­ருந்­தாலும், இந்தத் தீர்ப்­பா­னது இலங்கைப் பொலிஸ் துறையின் கட்­ட­மைப்புச் சிதை­வையும், அதன் தலை­மைத்­துவ வீழ்ச்­சி­யையும் உல­கிற்கு வெளிச்­சம்­போட்டுக் காட்­டி­யுள்­ளது.

இலங்கைப் பொலிஸ் சேவையின் அண்­மைய வர­லாற்றை ஆராய்ந்தால், அதன் உயர்­மட்டத் தலை­வர்கள் சந்­தித்த பின்­ன­டை­வு­களும் வீழ்ச்­சி­களும் பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

பூஜித் ஜய­சுந்­தர


நாட்டின் 34 ஆவது பொலிஸ் மா அதி­ப­ரான பூஜித் ஜய­சுந்­தர, கடமை தவ­றிய மற்றும் கொலைக்கு உடந்­தை­யாக இருந்த குற்­றத்­திற்­காக மரண தண்­டனைக் கைதி­யாகச் சிறைக்கு அனுப்­பட்­டுள்ளார்.

இவ­ருக்குப் பின்­ன­ராக 35 ஆவது பொலிஸ் மா அதி­ப­ராக பத­வியை ஏற்­றி­ருந்த சி.டி. விக்­ர­ம­ரத்ன, தனது ஓய்­வு­கா­லத்தில் காலத்தில் தன்­னைத்­தானே சுட்டுத் தற்­கொலை செய்­து­கொண்டார்.

இந்தத் தற்­கொலைச் சம்­பவம், பொலிஸ் துறையின் உயர்­மட்­டத்தில் நிலவும் மன உளைச்­ச­லையும், அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட கட்­ட­மைப்பின் பின்­ன­ணியில் நிலவும் கடு­மை­யான அழுத்­தங்­க­ளையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அவ­ருக்குப் அடுத்­த­ப­டி­யாக, 36 ஆவது பொலிஸ் மா அதி­ப­ராக நிய­மிக்­கப்­பட்ட தேச­பந்து தென்­ன­கோனின் கதையோ முற்­றிலும் வேறு­வி­த­மா­னது. அவர் மீது அடிப்­படை மனித உரிமை மீறல்கள், சட்­ட­வி­ரோதக் காவலில் வைத்து சித்­தி­ர­வதை செய்­தமை, குற்­ற­வியல் குற்­றச்­சாட்­டுகள் மற்றும் அர­சியல் பழி­வாங்­கல்கள் எனப் பல குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

உச்ச நீதி­மன்­றமே அவர் பொலிஸ் மா அதி­ப­ராகப் பணி­யாற்­று­வ­தற்கு இடைக்­காலத் தடை விதிக்கும் அள­வுக்கு நிலைமை மோச­ம­டைந்­தி­ருக்­கி­றது. நாட்டின் சட்ட ஒழுங்கைப் பாது­காக்க வேண்­டிய தலைமைப் பொறுப்பில் இருந்த தொடர்ச்­சி­யான மூன்று பொலிஸ் மா அதி­பர்­களின் இந்த மோச­மான நிலை, தனிப்­பட்ட அதி­கா­ரி­களின் தவ­று­களால் மட்டும் ஏற்­பட்­ட­தல்ல. மாறாக, இலங்கை பொலிஸ் அமைப்பின் ஒட்­டு­மொத்த கட்­ட­மைப்புச் சீர­ழி­வையே பிர­தி­ப­லிக்­கி­றது.

இலங்கைப் பொலிஸ் துறை என்­பது வெறு­மனே உயர்­மட்டத் தலை­வர்­களின் தவ­று­களால் மட்டும் சீர­ழி­ய­வில்லை. அதன் கீழ்­மட்டம் வரை பர­வி­யுள்ள ஊழல், இலஞ்சம், பாலியல் குற்­றச்­சாட்­டுகள் மற்றும் சந்­தேக நபர்­களைக் காவலில் வைத்துச் சித்­தி­ர­வதை செய்து கொல்­வது போன்ற சம்­ப­வங்கள் பொது­மக்கள் பொலிஸ் துறை மீது வைத்­தி­ருந்த நம்­பிக்­கையை முற்­றிலும் சிதைத்­து­விட்­டன.

வீதிப் போக்­கு­வ­ரத்துச் சோத­னைகள் முதல் பெரு­ம­ள­வி­லான போதைப்­பொருள் கடத்­தல்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்­களின் குற்றச் செயல்கள் வரை பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு உள்ள தொடர்பு தொடர்ந்து வெளிச்­சத்­திற்கு வந்­த­வண்ணம் உள்­ளன.

பொலிஸ் நிலை­யங்­க­ளுக்குப் முறைப்­பாடு அளிக்க வரும் பெண்­க­ளிடம் தவ­றாக நடப்­பது, காவலில் உள்ள பெண்­களைச் சுரண்­டு­வது மற்றும் அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்திப் பாலியல் அச்­சு­றுத்­தல்­களை விடுப்­பது போன்ற குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பி­லான தக­வல்­களும் அவ்­வப்­போது வெளி­வ­ரு­கின்­றன.

இத­னை­வி­டவும் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­படும் நபர்கள் விசா­ரணை என்ற பெயரில் கொடூ­ர­மாகச் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு இறப்­பதும், 'ஆயு­தங்­களைக் காட்டச் சென்­ற­போது சுடப்­பட்­டார்கள்' என்ற ஒரே மாதி­ரி­யான போலித்­த­ன­மான நியா­யங்கள் கற்­பிக்­கப்­ப­டு­வதும் வாடிக்­கை­யா­கி­விட்­டன. இத்­த­கைய மனித உரிமை மீறல் சம்­ப­வங்­களின் பட்­டியல் நீண்­ட­மையால் அது இலங்­கையை சர்­வ­தேச அரங்­கிலும் தலை­கு­னிய வைத்­துள்­ளது.

இலங்­கையைப் போன்றே உல­கெங்­கிலும் பொலிஸ் அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களும், கடமை தவ­றல்­களும் பெரும் சமூகப் புரட்­சி­க­ளுக்கும் சட்­டப்­பூர்­வ­மான சீர்­தி­ருத்­தங்­க­ளுக்கும் வழி­வ­குத்­துள்­ளன.

அமெ­ரிக்­காவை எடுத்­துக்­கொண்டால் ஜோர்ஜ் புளொய்ட் படு­கொ­லை­யா­னது சமூகப் புரட்­சியை தோற்­று­வித்­தது. அமெ­ரிக்­காவில் மினி­யா­போலிஸ் நகரில் பொலிஸ் அதி­காரி ஒரு­வரால் ஜோர்ஜ் புளொய்ட் என்ற கறுப்­பி­னத்­தவர் கழுத்து நெரிக்­கப்­பட்டுப் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம், உலகம் முழு­வ­தையும் உலுக்­கிய 'Bl­a­ck Liv­es Ma­t­t­er' இயக்­கத்­துக்கு வித்­திட்­டது.

இதன் விளை­வாக அமெ­ரிக்கப் பொலிஸ் அமைப்பில் நிதியைக் குறைத்தல், சுயா­தீனக் கண்­கா­ணிப்புக் குழுக்­களை அமைத்தல் மற்றும் பொலி­ஸாரின் கொடூ­ரத்­துக்கு எதி­ராகப் பல்­வேறு சட்டச் சீர்­தி­ருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.


பிரித்­தா­னி­யாவின் லண்­டனில் சாரா எவரார்ட் என்ற பெண், கட­மையில் இருந்த பெரு­ந­கர பொலிஸ் அதி­காரி ஒரு­வ­ரா­லேயே கடத்­தப்­பட்டுப் பாலியல் வன்­கொ­டுமை செய்­யப்­பட்டுப் படு­கொலை செய்­யப்­பட்டார்.

இச்­சம்­பவம் பிரித்­தா­னியப் பொலிஸ்­துறை மீதான பொது­மக்­களின் நம்­பிக்­கையை அசைத்துப் பார்த்­தது. இதன் விளை­வாக பொலிஸ் அதி­கா­ரி­களின் குற்­றப்­பின்­ன­ணி­களை மீண்டும் ஆய்வு செய்யும் தீவிர உள்­ளக விசா­ரணை முறைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன.

தென் ஆபி­ரிக்­காவில் வேலை­நி­றுத்­தத்தில் ஈடு­பட்ட 34 சுரங்கத் தொழி­லா­ளர்­களைப் பொலிஸார் சுட்­டுக்­கொன்ற 'மரி­கானா சம்­பவம்', அந்­நாட்டுப் பொலிஸ்­து­றையின் கறை­ப­டிந்த வர­லா­றாக மாறி­யது. இது பொலிஸ் துறையை முழு­மை­யாக மறு­சீ­ர­மைக்­கவும், 'சுயா­தீன பொலிஸ் புகார் விசா­ரணை இயக்­கத்தை' வலுப்­ப­டுத்­தவும் கார­ண­மா­னது.

உல­க­ளா­விய இந்த உதா­ர­ணங்கள் உணர்த்­து­வது என்­ன­வெனில், பொலிஸ் துறை என்­பது மக்­க­ளுக்குப் பாது­காப்பு அளிக்கும் அமைப்­பாக இருக்க வேண்­டுமே தவிர, மக்­களை அச்­சு­றுத்தும் அல்­லது அரசின் அர­சியல் தேவை­க­ளுக்­காகச் செயல்­படும் அடக்­கு­முறைக் கரு­வி­யாக மாறக்­கூ­டாது என்­ப­தாகும்.

இலங்கைப் பொலிஸ் சேவை­யா­னது 1866 ஆம் ஆண்டின் பொலிஸ் கட்­டளைச் சட்­டத்தின் அடிப்­ப­டை­யி­லேயே இன்­னமும் பிர­தா­ன­மாக இயங்கி வரு­கி­றது. கால­னித்­துவ ஆட்­சிக்­கா­லத்தில் மக்­களைக் கட்­டுப்­ப­டுத்த உரு­வாக்­கப்­பட்ட இந்தச் சட்டம், ஒரு ஜன­நா­யக நாட்டின் மக்­களின் உரி­மை­களைப் பாது­காக்கப் போது­மா­ன­தாக இல்லை.

இத­னா­லேயே, இலங்­கையில் நவீன, சுயா­தீ­ன­மான மற்றும் மக்­க­ளுக்­கான தேசிய பொலிஸ் கொள்கை (Nat­io­nal Poli­ce Poli­cy)உரு­வாக்­கப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை அர­சி­ய­ல­மைப்பு வல்­லு­நர்­களும் சமூக ஆர்­வ­லர்­களும் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

தேசிய பொலிஸ் கொள்­கை­யா­னது பின்­வரும் முக்­கிய அம்­சங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக அமைய வேண்டும்:

முத­லா­வ­தாக, பொலிஸ் அதி­கா­ரி­களின் நிய­ம­னங்கள், இட­மாற்­றங்கள், தர­வு­யர்­வுகள் மற்றும் ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­களில் அர­சி­யல்­வா­தி­களின் தலை­யீ­டு­களை முற்­றாக ஒழித்து, தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழு­வுக்கு முழு­மை­யான சுயா­தீன அதி­கா­ரங்­களை வழங்க வேண்டும்.

இரண்­டா­வ­தாக, பொலிஸ் பயிற்­சி­களில் மனித உரி­மைகள், சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான சட்­டங்கள் மற்றும் நவீன குற்­ற­வியல் விசா­ரணை முறைகள் கட்­டா­ய­மாக்­கப்­பட வேண்டும்.

மூன்­றா­வ­தாக, பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக வரும் முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்­வ­தற்கு சுயா­தீ­ன­மான பொலிஸ் விசா­ரணை கட்­ட­மைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும்.

நான்­கா­வ­தாக,  பொலி­ஸாரைக் கண்டால் பொது­மக்கள் அச்­சப்­படும் சூழலை மாற்றி, பொது­மக்­க­ளோடு இணைந்து குற்­றங்­களைத் தடுக்கும் சமூகப் பொலிஸ் முறையை வலுப்­ப­டுத்த வேண்டும்.

இந்த சீர்­தி­ருத்­தங்கள் அவசியமானவையாக ஒருபுறமிருக்கையில்,  பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு, எவ்வளவு பெரிய உயர்பதவியில் இருப்பவர்களானாலும் தங்களின் கடமையிலிருந்து தவறினால் அல்லது நாட்டின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தினால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதற்கான வலுவான எச்சரிக்கையாகும்.

இருப்பினும், வெறுமனே தனிநபர்களுக்குத் தண்டனை வழங்குவதோடு அரசு தனது கடமையை முடித்துக் கொள்ளக் கூடாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளையும் அரசியலமைப்புச் சதிகளையும் கண்டறிந்து வெளிக்கொணர்வது அரசின் தலையாய கடமையாகும்.

அதேநேரம், இலங்கை பொலிஸ் துறை என்பது ஆட்சியாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் அரணாக இல்லாமல், சட்டத்தின் ஆட்சியையும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் உண்மையான மக்கள் சேவையாக மாறும்போது மட்டுமே, இத்தகைய தேசியப் பேரழிவுகளை எதிர்காலத்திலாவது தடுக்க முடியும்.


ஆர்.ராம்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!