நுவரெலியா பஸ் தரிப்பு நிலையத்தில் பின்புறத்தில் பஸ் நிறுத்து இடத்தில் பின்னால் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. பயணிகளை இறக்கிவிட்டு, நிறுத்துமிடத்தை நோக்கி பின்னால் சென்று விபத்துக்கு உள்ளாமையால் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.
நுவரெலியாவிலிருந்து நுவரெலியா சாந்திபுர நோக்கி பயணிக்கும் இந்தத் தனியார்
பேருந்தை நிறுத்துவதற்கு முற்பட்ட போது, அது சாரதியின் கட்டுப்பாட்டை
இழந்து தலகல ஓயாவிற்குள் கவிழ்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து
நடந்த தருணத்தில் பேருந்திற்குள் சாரதியும் நடத்துநரும் மாத்திரமே
இருந்துள்ளதுடன், அவர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என நுவரெலியா
பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!