news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நேபாளத்தில் திடீர் வெள்ளம்: 384 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக தகவல்

26 Aug, 2026
நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் பாயும் போதே கோசி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, 384 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களில் 291 பேர் வெளிநாட்டவர்கள் எனவும், 3 பேர் நேபாள பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றை அண்மித்த பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மீட்புப் பணியாளர்கள் சம்பவத்துடன் தொடர்புடைய பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், வெள்ளத்தில் சிக்கியிருக்கக்கூடியவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.


காணாமல் போனவர்களின் நிலை தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் இதுவரை முழுமையாக வெளியிடப்படவில்லை.

நேபாளத்தின் மலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான வானிலை மற்றும் திடீர் வெள்ள நிலைமையால் மீட்பு நடவடிக்கைகள் சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!