பதைபதைக்க வைக்கும் சி.சி.டி.வி. காட்சி: கோவையில் அதிவேக கார் மோதி தந்தை, மகன் படுகாயம்
மோதிய வேகத்தில் அந்த கார் நிற்காமல், எதிரே வந்து கொண்டிருந்த பொலிரோ பிக்-அப் வாகனத்தின் மீதும் நேருக்கு நேர் மோதி நின்றது.
இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர்.
கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே அதிவேகமாக வந்த கார் மோதி தந்தை மற்றும் மகன் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கோவை மாவட்டம் சூலூர் மற்றும் கருமத்தம்பட்டிக்கு இடைப்பட்ட தட்டாம் புதூர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தந்தை மற்றும் மகன் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல தட்டாம் புதூர் சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அதே திசையில் அவர்களுக்குப் பின்னால் மிக அதிவேகமாக வந்த கார் ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தைக் கவனிக்காமல் கட்டுப்பாட்டை இழந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் அந்த கார் நிற்காமல், எதிரே வந்து கொண்டிருந்த பொலிரோ பிக்-அப் வாகனத்தின் மீதும் நேருக்கு நேர் மோதி நின்றது.
இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர்.
இதைப் பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் சக வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
Comments
Leave a Reply
Write the comments...............