தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா. இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவால் தனது 84 வயதில் நேற்று (10) காலமானார்.
பாரதிராஜா மறைவு செய்தி திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், திரைத்துறையினர், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பிறகு, நேற்று இரவு சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு காட்ரோடு அருகேயுள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட பாரதிராஜாவின் உடலுக்கு உறவினர்கள், ஊர்க்காரர்கள், ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு மேல் பாரதிராஜாவின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. பொலிஸார் அணிவகுத்து வந்து பாரதிராஜா உடலுக்கு 72 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 2 நாட்களாக திரைத்துறையினர், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!