news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரான்ஸ் காலிறுதி சுற்றுக்கு தகுதி

05 Jul, 2026
உலகக்கிண்ணம் கால்பந்தாட்ட போட்டி தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று போட்டிகள் முடிந்து, 16 அணிகளை தெரிவு செய்யும் 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. 

இதில், வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு தகுதி பெறும். 

அதற்கமைய, அதிகாலை 2.30 மணிக்கு அமெரிக்காவின் பிலடெல்பியா மைதானத்தில் நடந்த 3-வது சுற்று போட்டி ஒன்றில் பெரகுவே மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. 

இரு அணிகளும் கோல் அடிப்பதற்கான கடுமையான முயற்சிகளை முன்னெடுத்தன. 

பரபரப்பாக நடந்த இந்த போட்டியின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. 

இதனால், 2-வது பாதியில் கோலை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

2-வது பாதியில் பிரான்சின் கைலியன் எம்பாப்பே 70-வது நிமிடத்தில் கோல் போட்டார். 

இதனால், 1-0 என்ற கணக்கில் பிரான்ஸ் முன்னிலையில் இருந்தது. 

அதன்பின்பு கோல் அடிக்கப்படவில்லை. போட்டி முடிந்த பின்னர் மேலதிக நேரம் அளிக்கப்பட்டது. அப்போதும் கோல் விழவில்லை. இதனால், பிரான்ஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!