"புதுச்சேரியில் நண்பனின் சித்தியை நகைக்காக கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் நண்பனையும் அழைத்துக் கொண்டு ஜனநாயகன் படத்திற்குச் சென்ற கொலையாளியையும் அவனது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.
கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த ரமணி என்பவர் அம்மிக்கல்லால் தாக்கப்பட்டும், கத்தரிக் கோலால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். ஆறரை சவரன் தங்க நகைகள் மாயமாகி இருந்தன.
விசாரணையில்,ரமணியின் அக்கா மகனான சேது நாராயணனின் நண்பன் பிரவீன் குமார் என்பவன் தனது மனைவி ஈஸ்வரியுடன் சேர்ந்து நகைக்காக கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று ரமணியின் கணவர் மணி வீட்டில் இல்லாத சமயத்தில் வழக்கம் போல் தனது நண்பன் சேதுநாராயணனை பார்ப்பது போல் மனைவி ஈஸ்வரியுடன் ரமணி வீட்டிற்கு சென்றுள்ளான் பிரவீன்.
வீட்டின் மாடியில் இருந்த சேது நாராயணனை தனது மனைவி ஈஸ்வரியை அனுப்பி ரீல்ஸ் எடுப்பதாகக் கூறி திசை திருப்பிய பிரவீன், ரமணிக்கு புடவை வாங்கிக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இன்னொரு சர்ப்ரைஸ் இருப்பதாகக் கூறி ரமணியை கண்களை மூட வைத்த பிரவீன், புடவையில் மறைத்து எடுத்துச் சென்ற கல்லைக் கொண்டு ரமணியின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணியை அடைத்து, அம்மிக்கல்லால் தாக்கியதுடன் கத்தரிக் கோலாலும் குத்திக் கொலை செய்து விட்டு நகையை திருடிய பின் நண்பன் மற்றும் மனைவியுடன் ஜனநாயகன் படத்திற்கு சென்றது விசாரணையில் அம்பலமானது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!