பெண் கிளி ! (கவிதை)
பெண் கிளி !
ஒரு
சோலைக்கிளி
சந்தோசத்தில் வானத்தில்
மிதந்து கொண்டிருந்தது .......
அதன்
சோடிக்கிளியின்
வரவுக்காய் ஆரவாரத்தோடு
மேகம் முழுதுமாய் சிறகசைத்து........
தன்
தாய்மையின்
செய்தியை சொல்லி விட
இறக்கைகள் ஓயும் வரை விசிறியது ......
ஆண்
கிளியின் வருகை
தாமதிக்கத் தாமதிக்க
அதன் சந்தோசம் பயமானது!......
வேடர்களின்
வனாந்தரத்துக்குள் தான்
அவை சிநேகம் கொண்டு
கூடு கட்டி ஒன்றாய் வாழ்ந்தது .......
பெண்
கிளி இப்போது
தேடுவதை நிறுத்திக்கொண்டது
தன் துணையின் மூச்சுநின்றதை உணர்ந்தது.......
தனது
உணர்வுகளை பகிர்ந்திட
யாருமில்லாததால் சிறகுகளை
மீண்டும் வேகவேகமாக அசைத்து............
வானம் தொடும்
தூரம் வரை மேலே மேலே பறந்தது
சோடிக்கிளியை கண்முன்னே நிறுத்தி
விரித்த சிறகை மூடி பூமியை முத்தமிட்டது .......
***ஸ்வேதா ***
Comments
Leave a Reply
Write the comments...............