அதிவேகமாக வந்த தனியார் பேருந்தும் ட்ராக்டரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், கட்டுப்பாட்டை இழந்த ட்ராக்டர் அருகிலிருந்த கடைக்குள் புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கோர விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக, தனியார் பேருந்தும் ட்ராக்டரும் வீதியில் மிக அதிக வேகத்துடன், போட்டி போட்டுக்கொண்டு பயணிக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், எதிர்பாராத விதமாகப் பேருந்து மோதியதில், நிலைதடுமாறிய ட்ராக்டர் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கடைத் தொகுதிக்குள் கட்டுப்பாடின்றிப் புகுந்துள்ளது.
அபாயகரமான முறையில் குறித்த ட்ராக்டரில் சுமார் 30 பேர் வரை பயணித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த விபத்தின் போது கடையில் இருந்த மற்றும் ட்ராக்டரில் பயணித்தவர்களில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, ஹசலக மற்றும் மஹியங்கனை ஆகிய பொது வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
விபத்து தொடர்பாகப் பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹசலக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!