news@ilakkiyainfo.com

பிரிவுகள்

போர்க்­குற்­றங்கள் கார­ண­மாக வெறுக்­கப்­பட்ட நாடா­கி­யுள்ள இஸ்ரேல்

09 Jun, 2026
 இஸ்ரேல் இன்று உல­க­ளா­விய மட்­டத்தில் முன்­னொ­ரு­போதும் இல்­லாத வகையில் மக்கள் மத்­தியில் அதிக அளவில்  வெறுப்­புக்கு ஆளா­கி­யுள்­ளது. அண்­மைக்­கால உல­க­ளா­விய ரீதி­யி­லான கருத்துக் கணிப்­பொன்றின் மூலம் இது தெரிய வந்­துள்­ளது.  ஒரு அறிக்­கையின் படி 97.55 சதவீத­மான உலக மக்கள் இஸ்­ரேலை வெறுக்­கின்­றனர்.

இஸ்­ரேலின் படு­கொ­லைகள், இனப்­ப­டு­கொ­லைகள், மற்றும் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ரான முடி­வற்ற போர்க்­குற்­றங்கள், என்­ப­ன­வற்றை மூடி­ம­றைக்க அமெ­ரிக்­காவும் ஐரோப்­பாவும் அர­சியல், இரா­ணுவம், பொரு­ளா­தாரம், நிதி மற்றும் ஊட­கங்கள் வாயி­லாக அதி­க­ள­வான ஆத­ரவை வழங்­கிய போதிலும், சர்­வ­தேச மட்­டத்தில் அது மக்­க­ளது உணர்­வு­களில் ஒரு வியக்­கத்­தக்க மாற்­றத்­தையே பிர­தி­ப­லிக்­கின்­றது.

மறு­பு­றத்தில், பல ஆய்­வு­க­ளின்­படி, இஸ்­ரே­லுக்­கான அமெ­ரிக்­காவின் பொது ஆத­ரவு வர­லாற்றில் என்­று­மில்­லாத ஒரு சரிவைச் சந்­தித்­துள்­ளது. இது பெரும்­பாலும் தற்­போது காஸாவில் நடந்து வரும் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான செயற்­பா­டு­களால் உந்­தப்­பட்­டது.

அண்­மைக்­கால ஆய்­வுகள் பல, தற்­போது அதி­க­மான அமெ­ரிக்­கர்கள்   பலஸ்­தீ­னர்கள் மீது அனு­தா­பப்­ப­டு­கின்­றார்கள் என்­பதை வெளிப்­ப­டுத்தி உள்­ளன. இது பல தசாப்­தங்­க­ளாக நீடித்து வந்த அமெ­ரிக்­கர்­களின் வலு­வான இஸ்ரேல் சார்பு உணர்­வுக்கு முற்­றிலும் மாறு­பட்­ட­தாகக் காணப்­ப­டு­கின்­றது.

2026 மே 15 ஆம் திக­தி­யி­டப்­பட்ட 'நியூ ஏஜ்' என்ற சர்­வ­தேச அமைப்பின் கணக்­கெ­டுப்­பின்­படி, இஸ்ரேல் உலகின் மிகவும் விரும்­பப்­ப­டாத நாடாக மாறி­யுள்­ளது. காஸாவில் இஸ்­ரேலின் இனப்­ப­டு­கொ­லைகள், பலஸ்­தீ­னர்­களின் பாரிய அள­வி­லான இடப்­பெ­யர்­வுகள், பலஸ்­தீன மக்­களை பட்­டி­னியால் வாட்டும் இஸ்­ரேலின் காட்­டு­மி­ராண்டிக் கொள்­கைகள், மற்றும் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்குக் கரையில் அதி­க­ரித்து வரும் வன்­மு­றைகள் என்­ப­வற்­றுக்கு மத்­தியில் இஸ்­ரேலின் சர்­வ­தேச ரீதி­யான தனி­மைப்­ப­டுத்தல் தீவி­ர­மாக ஆழ­ம­டைந்து வரு­வதை குறிக்கும் மற்­றொரு அறி­கு­றி­யாக இது காணப்­ப­டு­கின்­றது.Holidays & Seasonal Events

இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பு அரசால் சர்­வ­தேச சட்­டங்கள் கடு­மை­யாக மீறப்­பட்டு வரு­வ­தாக மனித உரிமை அமைப்­புகள், ஐ.நா. நிபு­ணர்கள் மற்றும் சர்­வ­தேச நீதி­மன்றம் ஆகியன எச்­ச­ரித்­துள்­ளதால் இஸ்­ரேலின் உல­க­ளா­விய பிம்பம் தற்­போது மிக மோச­மாக சரிந்­துள்­ளது.

அமெ­ரிக்­காவும் அதன் ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்­பி­னதும் கடி­ன­மான கொள்­கைகள் கார­ண­மாக உல­க­ளா­விய நிலையில், அமெ­ரிக்கா பற்­றிய   மக்கள் அபிப்­பி­ரா­யமும் வியத்­தகு சரிவை சந்­தித்­துள்­ளது.

காஸா மீதான தாக்­குதல் தொடர்­பான விட­யத்தில் ஆக்­கி­ர­மிப்பு அர­சுக்கு எதி­ராக உல­க­ளா­விய பொதுக் கருத்து கடு­மை­யாக மாறி­யுள்ள நிலையில், இஸ்ரேல் சம்­பந்­த­மான மக்­களின் நிலைப்­பாட்­டிலும் சரிவு ஏற்­பட்­டுள்­ளது. 

2023 அக்­டோபர் முதல், இஸ்ரேல் 74 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட பலஸ்­தீ­னர்­களைக் கொன்று குவித்­துள்­ளது. காஸாவில் பொது­மக்­களின் பெரும்­பா­லான உள் கட்­ட­மைப்­புக்கள் அழிக்­கப்­பட்­டுள்­ளன. 

இஸ்­ரேலின் தொட­ரான நட­வ­டிக்­கைகள் கிட்­டத்­தட்ட முழு பலஸ்­தீன மக்­க­ளையும் இடம்­பெ­யர வைத்­துள்­ளது. மேலும் பல சந்­தர்ப்­பங்­களில் ஐ. நா நிபு­ணர்­களும், இனப் படு­கொ­லைகள் பற்­றிய அறி­ஞர்­களும் ஆய்­வா­ளர்­களும் பலஸ்­தீனில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் மோச­மான இனப் படு­கொ­லைகள் என்றே வர்­ணித்­துள்­ளனர்.

அத்­தோடு ஐரோப்­பிய தலை­வர்­களும் வியக்­கத்­தக்க விதத்தில் இஸ்­ரே­லிய வன்­முறை மற்றும் கொள்­கைகள் மீதான தங்கள் கண்­ட­னத்தை தீவி­ர­மாகக் கூர்­மைப்­ப­டுத்தி உள்­ளனர். சர்­வ­தேச கடற்­ப­ரப்பில் “குளோபல் சுமுத்” மனி­தா­பி­மான உதவி படகை இஸ்­ரே­லிய கடற்­படை இடை­ம­றித்­ததைத் தொடர்ந்து இஸ்­ரே­லுக்கும் ஐரோப்­பிய நாடு­க­ளுக்கும் இடையில் கடு­மை­யான இரா­ஜ­தந்­திர விரி­சலும் ஏற்­பட்­டுள்­ளது. 

இஸ்­ரேலின் தேசிய பாது­காப்பு அமைச்சர் இட்­டாமர் பென்-க்விர், தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள உல­க­ளா­விய ஆர்­வ­லர்­களை மண்­டி­யிட கட்­டா­யப்­ப­டுத்தும் வீடியோ காட்­சி­களை வெளி­யிட்­டதை அடுத்து இந்த ஆத்­திரம் அதி­க­ரித்­துள்­ளது.

அண்­மையில் நடந்த ஆழ்­கடல் நிவா­ரணப் பட­குகள் இடை­ம­றிப்பு சம்­ப­வத்­துக்குப் பிறகு ஐரோப்­பிய நாடுகள் இஸ்ரேல் மீது கடும் கோபம் கொண்­டுள்­ளன. “ஃப்ளோட்­டில்லா செயற்­பாட்­டா­ளர்கள்” என அழைக்­கப்­படும், இந்த நிவா­ரணப் படகு பய­ணிகள் தமக்­கி­டையே தொடர்­புகள் துண்­டிக்­கப்­பட்­ட­தா­கவும், தண்ணீர் கூட வழங்­கப்­ப­டாமல் தாங்கள் துன்­பு­றுத்­தப்­பட்­ட­தா­கவும், கைகள் மற்றும் கால்கள் கட்­டப்­பட்டு   தரையில் இழுத்துச் செல்­லப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கின்­றனர். 

இது தொடர்­பான காட்­சிகள் வெளி­யா­னதை அடுத்து இவ்­வாறு கொடுமை படுத்­தப்­பட்ட மக்­க­ளது நாடு­களின் அதி­கா­ரிகள் உட்­பட பல உலகத் தலை­வர்­க­ளி­ட­மி­ருந்து பெரும் கண்­ட­னங்­களும் எழுந்­துள்­ளன.

ஃப்ளோட்­டில்லா செயற்­பாட்­டா­ளர்கள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளனர். அதற்கு மூல கார­ண­மான இஸ்­ரேலின் பாது­காப்பு அமைச்சர் இத்­தாமர் பென்-க்விர், நாட்­டிற்குள் நுழை­வதைத் தடுக்கும் ஒரு தலைப்­பட்­ச­மான பயணத் தடையை பிரான்ஸ் வெளி­யிட்­டுள்­ளது.

ஃப்ளோட்­டில்லா ஆர்­வ­லர்கள் நடத்­தப்­பட்ட விதம் "ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது" என்று இத்­தா­லிய பிர­தமர் ஜோர்­ஜியா மெலோனி வன்­மை­யாகக் கண்­டித்­துள்ளார். இது மனித கண்­ணி­யத்தை மீறும் ஒரு செயல் என்று அவர் கூறி உள்ளார்.

அதேவேளை, இத்­தா­லியின் வெளி­யு­றவு அமைச்சர் அன்­டோ­னியோ தாஜானி ஐரோப்­பிய ஒன்­றியம் பென்-­கோவிர் மீது முழு அள­வி­லான பொரு­ளா­தாரத் தடை­களை அமல்­ப­டுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்ளார்.

அயர்­லாந்து பிர­தமர் மைக்கேல் மார்ட்டின், இந்த நடத்­தையை "ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது" என்று கண்­டித்தார். “இது சர்­வ­தேச சட்­டங்­களை இஸ்ரேல் தொடர்ந்து புறக்­க­ணித்து வரு­வதில் ஏற்­பட்­டுள்ள அதி­க­ரிப்பை சுட்டிக் காட்­டு­கின்­றது” என்று குறிப்­பிட்டார், 

மேலும் எதிர்­வரும் ஐரோப்­பிய ஒன்­றிய உச்­சி­மா­நாட்டில் இந்த விடயம் பற்றி விவா­திக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் முறைப்­படி கோரிக்கை விடுத்­துள்ளார்.

ஸ்பெயின் பிர­தமர் பெட்ரோ சான்­செஸும் மற்றும் அவரின் அர­சாங்­கமும் ஐரோப்­பாவில் இஸ்­ரேலின் வலு­வான விமர்­ச­கர்­களில் ஒரு­வ­ராக மாறி உள்­ளனர்.  

காஸாவின் நிலை­மையை ஒரு இனப் படு­கொலை என்று இவர் அடிக்­கடி குறிப்­பி­டு­கின்றார். பலஸ்­தீன அர­சையும் ஸபெயின் முறை­யாக அங்­கீ­க­ரித்­துள்­ளது. ஸ்பெயின் இஸ்ரேல் மீது முழு ஆயுதத் தடை­யையும் அமுல்படுத்­தி­யுள்­ளது 

மற்றும் அதன் தூது­வ­ரையும் திருப்பி அழைத்­துள்­ளது. காஸாவில் இஸ்­ரேலின் இரா­ணுவ நட­வ­டிக்கை கார­ண­மாக, 'யூரோ­விஷன்' பாடல் போட்­டியில் இருந்து இஸ்­ரேலை தடை செய்­யு­மாறும் ஸ்பெயின் பிர­தமர் அழைப்பு விடுத்­துள்ளார்.


இஸ்­ரே­லிய தலை­மைக்கு கைது உத்­த­ர­வு­களை பிறப்­பிப்­பதில், சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு (ஐ. சி. சி) ஸ்பெயின் தீவிர  ஆத­ர­வ­ளித்­துள்­ளது. மேலும் இஸ்­ரே­லு­ட­னான தொடர்­புகள் ஒப்­பந்­தத்தை இரத்து செய்­யு­மாறும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தை ஸபெயின் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. 

2025 ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில், ஸ்பெயின் இஸ்ரேல் மீது ஆயுதத் தடையை அமல்­ப­டுத்தும் ஒரு விரி­வான சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது. மேலும் ஸ்பானிய துறை­மு­கங்கள், மற்றும் வான்­வெளி வழி­யாக இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­திற்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட எரி­பொருள் மற்றும் ஆயு­தங்­களை கொண்டு செல்­வதைத் தடை செய்தும் உள்­ளது.

ஈரான் மற்றும் லெப­னா­னுக்கு எதி­ரான அமெ­ரிக்க மற்றும் இஸ்­ரே­லிய இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை சான்செஸ் கடு­மை­யாக எதிர்த்­துள்ளார்.  காஸாவில் செய்­ததைப் போலவே லெப­னா­னிலும் "அதே அள­வி­லான சேதத்­தையும் அழி­வையும்" ஏற்­ப­டுத்த இஸ்ரேல் முய­லு­கின்­றது என்று அவர் எச்­ச­ரித்­துள்ளார்.

 சர்­வ­தேச விளை­யாட்டு நிர்­வாக அமைப்­புகள் இஸ்­ரேலை உல­க­ளா­விய நிகழ்­வு­களில் போட்­டி­யிட விடாமல் தடை செய்­யு­மாறு சான்செஸ் முறைப்­படி கோரி­யுள்ளார். ரஷ்­யாவைப் போலவே இஸ்­ரேலும் தடை­க­ளையும், விலக்­கு­க­ளையும், எதிர்­கொள்ள வேண்டும் என்­பதே அவரின் வாத­மாகும்.  இஸ்ரேல் இடம்­பெற்­றி­ருந்­ததால், யூரோ­விஷன் பாடல் போட்­டியில் ஸ்பெயினின் ஒளி­ப­ரப்பு மற்றும் பங்­கேற்பை அவ­ரது நிர்­வாகம் புறக்­க­ணித்து விட்­டது.

உலக அர­சியல் அரங்கு முழு­வதும், ஐரிஷ் அர­சி­யல்­வா­திகள் பலஸ்­தீனில் இஸ்­ரேலின் நட­வ­டிக்­கை­களை கடு­மை­யாக எதிர்த்து குரல் கொடுக்கும் விமர்­ச­கர்­களில் ஒரு பிரி­வி­ன­ராக உள்­ளனர். இஸ்­ரேலின் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மா­னது, 

அது இனப்­ப­டு­கொ­லை­களில் ஈடு­ப­டு­கின்­றது மற்றும் சர்­வ­தேச சட்­டங்­களை தொடர்ந்து மீறு­கின்­றது என ஐரிஷ் அர­சி­யல்­வா­திகள் அடிக்­கடி கண்­டனம் செய்­கின்­றார்கள். இஸ்ரேல் மீதான உறு­தி­யான ஐரோப்­பிய பொறுப்­புக்­கூறல், மற்றும் பொரு­ளா­தாரத் தடை­க­ளுக்­காக அவர்கள் தொடர்ந்து வற்­பு­றுத்தி வரு­கின்­றனர்.

 "பலஸ்­தீன குழந்­தை­களும் அவர்­க­ளது குடும்­பத்­தி­னரும் எரிந்­ததைப் போலவே, பெஞ்­சமின் நெதன்­யாஹு வும் நர­கத்தில் எரிக்­கப்­ப­டுவார் என்று நான் நம்­பு­கிறேன்" என்று ஒரு பாரா­ளு­மன்ற விவா­தத்தின் போது, ஷின்பேன் கட்­சியின் ஐரிஷ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தாமஸ் கோல்ட் கூறினார். 

அட்­டூ­ழி­யங்­களை அனு­ப­வித்த யூத மக்கள், காஸாவில் இது­போன்ற மிரு­கத்­த­ன­மான செயல்­களைச் செய்ய இஸ்­ரே­லிய அர­சாங்­கத்தை எவ்­வாறு 'அனு­ம­திக்க' முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்­பினார்.

"உல­கத்தின் முன், இனப்­ப­டு­கொ­லையில் இருந்து தப்­பிக்க முடியும் என்று நினைப்­பது எந்த வகை­யான ஆட்­சி­யாக இருக்க முடியும்? இனப்­ப­டு­கொலை சம்­பந்­த­மாக குற்றம்  சாட்­டப்­படும் போதெல்லாம் இஸ்ரேல் அதை தொட­ரவே விரும்­பு­கின்­றது" என்று பாரா­மன்­றத்தில் உரை­யாற்றும் போது கூறிய அயர்­லாந்து அர­சி­யல்­வாதி ரிச்சர்ட் பாய்ட் பாரெட், ரஃபாவில் இஸ்­ரேலின் நட­வ­டிக்­கை­களை வன்மையாகக் கண்டித்தார்.

 பலஸ்தீனர்களுடனான பல தசாப்த கால மோதல்களின் விளைவாக 24 இற்கு மேற்பட்ட ஐ. நா. உறுப்பு நாடுகள், குறிப்பாக அரபு லீக் மற்றும் பரவலாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி) என்பனவற்றின் எதிர்ப்பு மற்றும் நிராகரிப்பு என்பனவற்றால் இஸ்ரேலின் உலகளாவிய பிம்பம் கணிசமாகச் சரிந்துள்ளது. 

மனித உரிமைகள் அமைப்புகள், ஐ.நா நிபுணர்கள் மற்றும் சர்வதேச நீதிமன்றங்கள் என்பன ஆக்கிரமிப்பு அரசு சர்வதேச சட்டங்களை கடுமையாக மீறி வருவதாக எச்சரித்துள்ளதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

எது எப்படி இருந்த போதும், மாறிவரும் கருத்துக்கள் மற்றும் வளர்ந்து வரும் பொது மக்கள் எதிர்ப்புகள் என்பன கணிசமாக இருந்தபோதிலும், மேலைத்தேச அரசாங்கங்கள் குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேலுடன் தங்கள் மூலோபாய, நிதி மற்றும் இராஜதந்திர கூட்டணிகளை பெரும்பாலும் தொடர்ந்து பேணி வருகின்றன. காஸாவில் அமெரிக்க இஸ்ரேல் கூட்டணி தொடர்ந்து நடத்தி வரும் மூர்க்கத்தனமான இனப் படுகொலைகளுக்கான விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும். அது இஸ்ரேலுக்கான தடைகளாகவும் அமையலாம்.    

-லத்தீப் பாரூக்-

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!