news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மட்டக்களப்பில் மீள ஆரம்பமானது உயர்தரப் பரீட்சை: மழையினால் மாணவர்களுக்கு வலயக்கல்வி அலுவலகம் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

12 Jan, 2026

'டிட்வா' புயல் அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான தேர்வுகள், இன்று (12.01.2026) மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் இன்று காலை முதல் பரீட்சைகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன.

மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனையின் பேரில், தொடர் மழையினால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்குத் தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர். மட்டக்களப்பின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், போக்குவரத்துச் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பரீட்சார்த்திகள் அனைவரும் போதிய நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்குச் சமூகமளிக்குமாறு வலயக்கல்வி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

Comments

Write the comments...............