news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மரணம் சுகமானது ?- ஸ்வேதா (கவிதை)

11 Feb, 2015
மரணம் சுகமானது ? இந்த இடுகாடோ.. அல்ல அந்தச் சுடுகாடோ என் வருகைக்காய் காத்திருப்பதை உணர்கிறேன் …    பத்துத் திங்கள் கருவறை என் கூடிய பட்ச நிம்மதியான நாட்கள்  என்றே எண்ணத் தோன்றுகிறது …   கருவறை சுகமானது … கல்லறைகளும் சுகமானதா ? கருவறை விட்டு வெளி வந்து  கல்லறை வரைக்காலங்கள் -நரகம் …   யாரும் யார் மீதும் நிலைத்து அன்பு கொள்வதில்லை எல்லாமே எதை நோக்கி ஓடுகிறார்கள் ?  ஏன் என்னால் மட்டும் மாற முடியாதுள்ளேன் ? …   என்னுள்ளே எழுகின்ற வினாக்களுக்கு முடிவு காணாது விடை பெற்று விடுவேனோ ? நான் பூமியில் பிறந்திருக்கவே கூடாது …   என்னை அன்பு செய்தவர்கள் முடிவில்லாது அம்பு எய்கிறார்கள் மனசு கனக்கிறது மாயைக்குள் விழுந்து விட … நானும் தயாரில்லை  இவைகளை விட மரணம் சுகமானது…   ***ஸ்வேதா *** -பிரான்ஸ்-

Comments

Write the comments...............