news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மாகாணசபை: வெளிப்படுத்தப்பட வேண்டிய இரகசியங்கள்

02 Aug, 2026
“கடு­மை­யான அழுத்­தத்தை பாவித்து இலங்கை ஜனா­தி­பதி ஜய­வர்­த­னவை உடன்­பட வைத்த இந்­திய-, இலங்கை  ஒப்­பந்­தத்தை நீங்கள் ஏற்­க­வேண்­டி­ய­தில்லை,  ஏற்­கா­விட்­டாலும் எதிர்ப்பு தெரி­விக்­காமல் இருங்கள்'  என்று பாரதப் பிர­தமர் ராஜீவ்­காந்தி வின­ய­மாக கேட்­டது மட்­டு­முன்றி 'வடக்கு, கிழக்கு மாகா­ணத்தில் ஓர் இடைக்­கால அரசை நிறு­வு­வது பற்றி நான் உங்­க­ளுடன் ஓர் இர­க­சிய ஒப்­பந்தம் செய்து கொள்­ளவும், ஆயத்­த­மாக இருக்­கிறேன்' என கூறி­ய­போதும்  'ஒற்றை ஆட்சி முறை­யான அதி­கா­ரப்­ப­கிர்வை நாம் ஏற்றுக் கொள்ளத் தயா­ரில்லை' என தலைவர் பிர­பா­கரன் மறு­த­லித்து தனது  அதி­ருப்­தியை  பாரதப் பிர­த­ம­ரி­டமே தெரி­வித்த சம்­ப­வங்கள் பிற்­கால அர­சி­யலில் பல மாற்­றங்­களை உரு­வாக்­கின.

இந்­திய ,- இலங்கை ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டு­வ­தற்கு  முன்­னை­யநாள் 1987 ஜூலை 28ஆம் திகதி நள்­ளி­ரவு விடு­த­லைப்­பு­லி­களின்  தலைவர் பிர­பா­க­ர­னையும், அர­சியல் ஆலோ­சகர் அன்ரன் பால­சிங்­கத்­தையும்  இந்­தியப் புல­னாய்­வுப்­பி­ரி­வினர் சந்­தித்து 'பிர­தமர் ராஜீவ் காந்தி அவ­ச­ர­மாக தங்­களை சந்­திக்க விரும்­பு­வ­தாக தெரி­விக்­கி­றார்கள். அதன்பின் அவர்கள் இரு­வ­ரையும் பாரதப் பிர­தமர் தங்­கி­யி­ருந்த இடத்­துக்கு அவ­ச­ர­மாக அழைத்­துச்­செல்­கி­றார்கள்.

 வெண்­ணிற ஆடை அணிந்து, மிக ஆவ­லோடு இவர்கள் வர­வுக்­காக  காத்துக் கொண்­டி­ருக்­கிறார் பாரதப் பிர­தமர். அவ­ருடன் புல­னாய்­வுத்­துறை அதிபர் நாரா­ய­ணனும் தமி­ழக அமைச்சர் பண்­டி­ருட்டி இரா­மச்­சந்­தி­ரனும் உடன் நிற்­கி­றார்கள். கவர்ச்­சி­யான புன்­ன­கை­யுடன், தலைவர் பிர­பா­க­ர­னையும் ஆலோ­சகர் பால­சிங்­கத்­தையும் பிர­தமர் ராஜீவ்  வர­வேற்­கிறார்.

       உரை­யாடல் உடன் ஆரம்­பிக்­கப்­ப­டு­கி­றது. தலைவர் பிர­பா­க­ர­னிடம்  பாரதப் பிர­தமர் உரை­யாடத்  தொடங்­கு­கிறார் “ஏன் ஒப்­பந்­தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்­கி­றீர்கள், குறை­பா­டு­களை விப­ர­மாக தெரி­வி­யுங்கள்“  என வின­வு­கிறார்.

கேட்­பது இந்­திய வல்­ல­ரசின்  பிர­தமர், பதில் அளிக்­கப்­போ­வது விடு­தலைப்புலிகள் அமைப்பின் தலைவர். தலை­வ­ருக்­காக, ஆலோ­சகர்  பால­சிங்கம் விப­ர­மாக விளக்­கினார். 

“இலங்­கையின் ஒற்­றை­யாட்சி  அர­சியலமைப்பு மிக இறுக்­க­மான, நெகிழ முடி­யாத விதி­களைக் கொண்­டது. பெரும்­பான்­மை­யி­னரின் நலன்­களைப் பேணும் வகையில் வரை­யப்­பட்­டி­ருக்­கி­றது. 

இதன்கீழ் மத்­திய அர­சுக்கும் மாநி­லங்­க­ளுக்கு மத்­தியில் அர்த்­த­பூர்­வ­மான முறையில் அதி­கா­ரப்­ப­கிர்வு  செய்­வது இய­லாது. அது மட்­டு­மன்றி நிறை­வேற்றுதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை அமுலில் உள்­ளது. இத்­த­கைய ஒற்­றை­யாட்சி யாப்பை, இந்­திய -, இலங்கை ஒப்­பந்தம் நிபந்­த­னை­யின்றி ஏற்றுக் கொண்­டுள்­ளது. எனவே நியா­ய­ப்பூர்­வ­மாக அதி­கா­ரப்­ப­கிர்வு செய்யும் அர­சியல் கட்­ட­மைப்பில் அடிப்­படை மாற்றம் செய்­வது சாத்­தி­ய­மற்­றது.  

அத்­துடன்,   தமி­ழரின் நில­வு­ரிமை  முக்­கி­ய­மா­னது. வடக்கு, கிழக்கு தமிழ்ப்­பேசும் மக்­களின் சொந்த நிலம்,  அவர்­க­ளது பாரம்­ப­ரிய தாயகம். அந்த நிலத்தை பிரிக்கும் எந்தத் திட்­டத்­தையும், ஏற்றுக்கொள்­ளப்­போ­வ­தில்லை 

 வடக்கு, கிழக்கு இணைப்பு ஒப்­பந்­தத்தில் தற்­கா­லி­க­மா­னதே. நிரந்­தர இணைப்­புக்கு பொது­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­வதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்­ளப்­போ­வ­தில்லை. வாக்­கெ­டுப்­பின்­போது  சிங்­கள, முஸ்லிம் மக்கள்  பெரும்­பான்­மை­யாக இணைப்பை எதிர்த்து வாக்­க­ளித்தால்  வடக்கு, கிழக்கு நிரந்­த­ர­மாக பிள­வு­பட்டு விடும்“ என பிர­த­ம­ரிடம் வரி­வாக எடுத்துக்  கூறப்­பட்­டது.

இந்த  விளக்­கத்தை மிகப் பொறு­மை­யு­டனும் அமை­தி­யாகவும்  கேட்டுக் கொண்­டி­ருந்த பாரதப் பிர­தமர், அதற்குப் பதில் அளிக்கும் முக­மாக , “உங்­க­ளது பிரச்­சி­னை­களை என்னால் புரிந்து கொள்­ள­மு­டி­கி­றது. மாகாண சபை  முறை­மையின்  குறை­பா­டுகள்   தொடர்­பாக  இலங்கை ஜனா­தி­பதி  ஜய­வர்­த­ன­வுடன் பேசி தீர்வு தேடித்­த­ருவேன்.  கட்டம் கட்­ட­மா­கவே தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்வு காண­மு­டியும்.  ஒரே தட­வையில்  எல்லாப் பிரச்­சி­னைக்கும் தீர்வு காண முடி­யாது.  

கடு­மை­யான  முயற்­சியின் பின்பு இணைக்­கப்­பட்ட  மாகா­ணத்தில்  தமிழ் மக்­க­ளுக்கு பிர­தேச சுய ஆட்­சியைப் பெற்­றுள்ளோம். இது ஒரு பெரிய முன்­னேற்றம் என்­பதை புரிந்து கொள்­ளுங்கள். 

வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பில்   வாக்­கெ­டுப்­புக்கு விடாமல் ஒத்­தி­வைக்­கும்­படி ஜய­வர்­த­ன­விடம் பேசுவேன். எதற்கும் நீங்கள் இந்­திய அரசை நம்ப வேண்டும்.  உங்­க­ளது அமைப்பின் ஒத்­து­ழைப்பும், ஆத­ரவும் வேண்டும்“  என பாரதப் பிர­தமர் கூறி­யதைக் கேட்டுக் கொண்­டி­ருந்த பண்­ருட்­டி, பிர­தமர் கூறி­யதை தமிழில் விரி­வாக விளக்­கினார். பிர­தமர்  ராஜீவ் காந்­தியின் உத்­த­ர­வா­தத்­தையோ பண்­ருட்­டியின் அழ­கான விளக்­கத்­தையோ கேட்டு தலைவர் பிர­பா­கரன்  திருப்­திப்­ப­ட­வில்லை என்­பது அவ­ரது பேச்­சி­லி­ருந்து புரிந்து கொள்ள முடிந்­தது.

இந்த ஒப்­பந்தம்  தமிழ் மக்­களின் நலனை  பேண­வில்லை, பாத­க­மாக இருக்­கி­றது.  ஆகவே, இந்த உடன்­ப­டிக்­கையை ஏற்றுக் கொள்ள முடி­யாது என பிரபாகரன் மறு­த­லித்தார்.

 முரண்­பாட்டை வளர்க்க விரும்­பாத பாரதப் பிர­தமர், தனது அணு­கு­மு­றையை மாற்றிக் கொண்டு,  “நீங்கள் இந்த ஒப்­பந்­தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவை­யில்லை. ஆனால், இந்த ஒப்­பந்­தத்­துக்கு எதிர்ப்பு தெரி­விக்­காமல்  இருந்தால் போதும்“ என்று கேட்டார்.  

 இந்த இடத்தில் குறுக்­கிட்டு கருத்து தெரி­விக்க விரும்­பிய பண்­ருட்டி, “இது ஓர் அற்­பு­த­மான திருப்பம்  அல்­லவா? பாரதப் பிர­த­மரே உங்­க­ளது நிலைப்­பாட்டை ஏற்றுக் கொள்­கிறார். நீங்கள் ஒப்­பந்­தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவை­யில்லை, ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரி­விக்க வேண்டாம். இந்த சிறிய சலு­கையையாவது இந்­திய அர­சுக்கு நீங்கள் செய்யக் கூடாதா“ என்று    ஆலோ­சனை வழங்­கினார்.  

இச்­சந்­தர்ப்­பத்தில் தலைவர் பிர­பா­கரன் பதில் அளிக்­கையில்  “ஒரு விட­யத்தை நாம் ஏற்றுக் கொள்­ள­வில்லை என்றால், நாம் அதை  எதிர்க்­கிறோம் என்­று­தானே அர்த்தம்“ என அடித்துக் கூறி­யதைக் கேட்ட பாரதப் பிர­தமர்  பேச்சை வேறு திசைக்கு திருப்ப முற்­பட்டார்.

“உங்­க­ளது இயக்­கத்­துக்கும்  மக்­க­ளுக்கும் ஜய­வர்­த­னவின் மீது நம்­பிக்­கை­யில்லை என்­பது  எனக்கு நன்கு தெரியும். எனக்கும் அவர் மீது நம்­பிக்­கை­யில்­லைத்தான். என்­றாலும் அவர்­மீது கடு­மை­யான அழுத்தம் பிர­யோ­கித்து,  முக்­கி­ய­மான சலு­கை­களைப் பெற்று  இந்த ஒப்­பந்­தத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கிறோம்.

மாகாண சபை முறையில் குறைகள் இருக்­கலாம். எனினும், நாம் தொடர்ந்து பேச்­சுக்­களை நடத்தி, பிர­தேச சுயாட்சி அதி­கா­ரத்தைக் கூட்­டலாம். மாகாண சபை முறையை நடை­மு­றைப்­ப­டுத்த நீண்ட காலம் எடுக்­கலாம். 

அந்த கால இடை­வெ­ளியில் வடக்கு, கிழக்கில் ஓர் இடைக்­கால அரசை நிறுவ முடியும்.  இந்த இடைக்­கால அரசில் தங்கள் அமைப்பு பிர­தான பங்கு வகிக்­கலாம்.    தமிழர் மாநி­லத்தில் ஓர் இடைக்­கால அரசு நிறு­வு­வது பற்றி நான் உங்­க­ளுடன் ஓர் இர­க­சிய உடன்­பாடு செய்து கொள்­ளவும்  ஆயத்­த­மாக இருக்­கிறேன்“ என பாரதப் பிர­தமர் தெரி­வித்தார்.

இது, தமி­ழக அமைச்சர் பண்­­ருட்டி இரா­மச்­சந்­தி­ரனை பர­வ­சத்தில் ஆழ்த்­திய நிலையில், அவர் உணர்ச்சி வசப்­பட்­ட­வ­ராக,    “இந்த அற்­பு­த­மான சந்­தர்ப்­பத்தை நழுவ விட­வேண்டாம். விடு­தலைப்புலிகள் நிர்­வாக ஆட்­சியை நிறுவும்  அரு­மை­யான வாய்ப்பு ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இந்­திய,இலங்கை ஒப்­பந்தம் பற்றி பெரி­தாக அலட்டிக் கொள்ள வேண்டாம். 

அதற்கு முன்பே, ராஜீவ்  -–   பிரபா ஒப்­பந்தம் செய்யப் பாரதப் பிர­தமர் ஆயத்­த­மாக இருக்­கிறார்.  இதை பகி­ரங்­கப்­ப­டுத்த தேவை­யில்லை.  - இர­க­சி­ய­மா­கவே வைத்துக் கொள்­ளலாம்"  என ராஜீவ்-– -பிரபா ஒப்­பந்­தத்­துக்கு  ஒரு பிர­மா­த­மான வடிவம் கொடுக்க முற்­பட்டார்.

இந்தப் பேச்­சு­வார்த்­தையின் முடிவில் மாகாண சபை உரு­வாக்­கு­வ­தற்கு முன்னர்  வடக்கு, கிழக்கில் ஒரு  இடைக்­கால நிர்­வாக ஆட்சி  நிறு­வப்­பட்டு  அதில் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு  பெரும்­பான்மை பிர­தி­நி­தித்­துவம் வழங்­கு­வ­தென  முடி­வெ­டுக்­கப்­பட்­டது. 

இன்­னொரு விட­ய­மாக சகல  தமிழ்ப் போரா­ளிகள் அமைப்­புக்­க­ளுக்கும்  இடைக்­கால நிர்­வாக கட்­ட­மைப்பில் பிர­தி­நி­தித்­துவம் வழங்க வேண்­டு­மென பாரதப் பிர­தமர்  கேட்டுக் கொண்­ட­போது அதை தலைவர்  பிர­பா­கரன்  மறு­த­லித்து, இறு­தியில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணிக்கும்  ஈரோஸ் அமைப்­புக்கும் மட்டும்,  குறைந்­த­ளவு பிர­தி­நி­தித்­துவம் வழங்­கு­வ­தென  இணக்கம் காணப்­பட்­டது.  

வடக்கு ,கிழக்கு இடைக்­கால நிர்­வாகம்,  கட்­ட­மைப்பு,  அதி­காரம் போன்­றவை தொடர்பில் இலங்கை ஜனா­தி­ப­தி­யுடன் பேசி முடி­வெ­டுப்­ப­தாக  பார­தப்­பி­ர­தமர் ராஜீவ் காந்தி உறுதி அளித்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.  

இந்த உடன்­பா­டு­க­ளுக்கும் முடி­வு­க­ளுக்கும், பிற்­கா­லத்தில் என்ன நடந்­தது என்­பது தேச­ம­றிந்த செய்­தி­யாகும். 13ஆவது  திருத்­தத்­துக்கு அமைய, மாகா­ண­சபை உரு­வாக்­கப்­பட்டு தேர்தல் நடத்­தப்­பட்­டது. 

விடு­த­லைப்­பு­லிகள் மற்றும் தமிழர் விடு­தலைக் கூட்­டணி இத்­தேர்­தலில் பங்­கு­கொள்­ள­வில்லை.   வடக்கு, கிழக்கு தற்­கா­லிக இணைப்­புடன் ஆட்சி நிறு­வப்­பட்ட காலத்தில்  வர­த­ராஜப் பெருமாள் தலை­மை­யி­லான ஆட்சி வடக்கு, கிழக்கில் அமைக்­கப்­பட்­டது.

13ஆவது திருத்­தத்தில் கூறப்­பட்ட அதி­கா­ரங்­களில் மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்த அதி­கா­ரங்­க­ளான காணி அதி­காரம், பொலிஸ் அதி­காரம், 13ஆவது திருத்­தத்­தி­லி­ருந்து வெட்டியெடுக்­கப்­பட்­டது. 

ஜனா­தி­பதி ஜய­வர்­த­னவின் இந்த ஏமாற்­றுத்­தனம் பற்றி வர­த­ராஜப் பெருமாள் தலை­மை­யி­லான  அரசு இந்தியப்பிரதமருக்கு பல முறைப்பாடுகளை மேற்கொண்டபோதும் அது வெற்றியளிக்காத நிலையில்  இவர்களின் பின்வாங்கல் காரணமாகவும் விடுதலைப்புலிகள் ஜனாதிபதி பிரேமதாசவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாகவும் மாகாண ஆட்சி கலைக்கப்பட்டது.  

இந்திய இராணுவம் வாபஸ் பெறப்பட்டது.  வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டது. தற்போது மாகாணசபை தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

“மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் முழுமையாக பகிர்ந்தளிக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட வேண்டும் இலங்கை அரசாங்கமானது தனது நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தமானது எது என்பதைத் தீர்மானித்து அதனை நடை முறைப்படுத்துவதனூடாக நிரந்தரமான தீர்வைக் காண வேண்டும்” என, அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சசி தரூர் தெரிவித்திருந்தததை நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.


திருமலை நவம்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!