news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மின்சாரம் மற்றும் எரிபொருள் மானியங்கள் படிப்படியாக நீக்கப்படும் – இலங்கை அரசு IMF-க்கு அறிவிப்பு

29 May, 2026

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, இலங்கை அரசு மின்சாரம் மற்றும் எரிபொருள் மானியங்களை படிப்படியாக குறைத்து முழுமையாக நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இணைந்து IMF நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதில், எரிசக்தி விலைகள் செலவின அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் முறையை தொடர்வதாகவும், தற்போதுள்ள மின்சாரம், எரிபொருள், உரம் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கான மானியங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 2026 செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த மானியங்கள் படிப்படியாக நீக்கப்படும் என்றும், மிகவும் பாதிக்கப்படுவோருக்கு “அஸ்வெசும” போன்ற சமூக நலத்திட்டங்கள் மூலம் நிவாரணம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் முயற்சியாகவும், IMF திட்ட இலக்குகளை பூர்த்தி செய்வதற்கான முக்கிய நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!