முடி வளர்ச்சியை அதிகரிக்க கறிவேப்பிலை பயன்பாடு ; இயற்கை தீர்வு
முடி உதிர்வு என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பொதுவான ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. தூக்கமின்மை, உணவுப் பழக்க மாற்றங்கள், மருந்து பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்த பிரச்சனை அதிகரிக்கிறது என கூறப்படுகிறது.
இதற்கு இயற்கை தீர்வாக கறிவேப்பிலை பயன்படுத்தலாம் என அழகு குறிப்புகளில் தெரிவிக்கப்படுகிறது.
தேவையான பொருட்களாக கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் கறிவேப்பிலையை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனை ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் தயிருடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இந்த கலவையை முடியின் உச்சந்தலை முதல் நுனி வரை நன்கு தடவி சுமார் ஒரு மணி நேரம் வைத்த பிறகு அலசிக்கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி வலுவாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும் என அழகு ஆலோசனைகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!