தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக விளங்குபவர் அஜித்குமார். இவரது தாயார் மோகினி மணி (84), வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவினால் சனிக்கிழமை (30) காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், திரைத்துறையினரும் ரசிகர்களும் பெருமளவில் அணிதிரண்டு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2023ஆம் ஆண்டு அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் காலமானார். தந்தை இறந்து இரண்டு ஆண்டுகளுக்குள், தற்போது தாயார் மோகினி மணியும் உயிரிழந்த சம்பவம் அஜித் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய், அஜித்குமாரின் இல்லத்திற்கு நேரில் சென்று அன்னாரின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் விஜயை, அஜித்குமார் தனது வீட்டின் வாசலிலேயே கட்டியணைத்து வரவேற்றார். விஜயும் அவரை இறுக்கமாகக் கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.
இரு உச்ச நட்சத்திரங்களும் தங்களது துக்கத்தைப் பகிர்ந்துகொண்ட இக்காட்சி அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.
அதேநேரம், முதலமைச்சர் விஜய் காரை விட்டு வந்திறங்கிய மறுபக்கத்தில், பிரபல நடிகை த்ரிஷாவும் வந்திருந்தார். அவரையும் அஜித்குமார் கட்டித்தழுவித் தனது துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.
முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்த வந்திறங்கிய இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி (Viral) வருகின்றன.
குறிப்பாக, அந்த வீடியோவில் விஜயுடன் நடிகை த்ரிஷாவும் இருப்பதுதான் இணையவாசிகளிடையே இன்னும் பெரியளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. முதலமைச்சர் விஜய்க்குப் பின்னால் த்ரிஷா காரில் வந்தாரா?அல்லது ஏற்கனவே அஞ்சலி செலுத்த வந்திருந்தவர், முதலமைச்சர் விஜய் வந்தவுடன் அவரோடு இணைந்து கொண்டாரா? அல்லது இடைநடுவில் வந்து இணைந்தாரா
? போன்ற துல்லியமான விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!