news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மொஜ்தபா உயிர் தப்பியது எப்படி? ஜஸ்ட் மிஸ்... நொடியில் நடந்த சம்பவம் - லீக்கான ஆடியோ

22 Mar, 2026
இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் 37 ஆண்டுகளாக உச்ச தலைவராக இருந்த அயாத்துல்லா காமேனி உள்பட ஈரானிய முக்கிய அதிகாரிகள், தலைவர்கள் கொல்லப்பட்டனார். ஆனால் இந்த தாக்குதலில் இருந்து தற்போது உச்சபட்ச தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் மொஜ்தபா காமேனி தப்பியது எப்படி என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம். இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் போர் லேட்டஸ்ட் செய்திகள்: ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் இஸ்ரேல் - தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 1300க்கும் மேற்பட்ட ஈரானில் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஈரானின் பதிலடி இஸ்ரேல் - அமெரிக்கா தொடங்கிய போரின் முதல் நாளிலேயே, கடந்த 37 ஆண்டுகளாக ஈரானின் உச்சபட்ச தலைவராக இருந்துவந்த அயாத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இஸ்ரேல் - அமெரிக்காவின் நீண்டகால திட்டம் மற்றும் வியூகத்தால் அலி காமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் தொடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியிருப்பதால் உலகின் எரிபொருள் விநியோகச் சங்கிலியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொஜ்தபாவுக்கு வலைவீச்சு ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்தை சீராக்க அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளிடம் அங்கு போர் கப்பலை அனுப்பும்படி கோரிக்கை வைத்தாலும் கூட யாரும் அதற்கு துணியவில்லை. தற்போது ஈரானின் உச்சபட்ச தலைவராக நியமனம் செய்யப்பட்ட மொஜ்தபா காமேனி, போர் நிறுத்தப்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியிருக்கும் என்பதிலும் தீர்மானமாக இருக்கிறார். இதனால், மொஜ்தபாவை இஸ்ரேல் - அமெரிக்கா முழு மூச்சில் தேடி வருகிறது. அவர் உள்பட ஈரானின் 10 தலைவர்கள் குறித்து தகவல் சொல்பவர்களுக்கு ரூ.92 கோடி வரை சன்மானம் வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யா தப்பிய மொஜ்தபா? ஆனால், இதுவரை மொஜ்தபா காமேனி, இஸ்ரேல் - அமெரிக்கா தேடும் மற்ற ஈரானிய தலைவர்களோ யாருமே சிக்கவில்லை. இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதலில் மொஜ்தபா காமேனி காயமடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின, டொனால்ட் டிரம்ப் கூட அதையே கூறினார். அப்படியிருக்க, அவர் சிகிச்சைக்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ரஷ்யாவுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளிவந்தன. லீக் செய்யப்பட்ட ஆடியோ இஸ்ரேல் - அமெரிக்கா உச்சபட்ச தலைவரின் குடியிருப்பு வளாகத்தில் நடத்திய தாக்குதலில் அயாத்துல்லா அலி காமேனி, அவரது மனைவி, மகள், மருமகன், பேத்தி மற்றும் மொஜ்தபாவின் மனைவி, ஈரானிய உயர் அதிகாரிகள் என இத்தனை பேரும் உயிரிழந்த நிலையில் மொஜ்தபா எப்படி உயிருடன் தப்பித்தார்? என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருந்தது. இதுகுறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதை விரிவாக இங்கு காணலாம். உயர் மட்ட கூட்டத்தில் ஈரானிய அதிகாரிகள் பேசும் ஆடியோ தற்போது லீக் ஆகியிருப்பதாக என The Telegraph தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது, வேண்டுமென்றே அந்த ஆடியோவை ஈரானிய அதிகாரிகள் லீக் செய்திருப்பதாக தெரிகிறது. அந்த ஆடியோவில், உச்சபட்ச தலைவரின் வளாகத்தில் ஏவுகணை தாக்குதல் நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்தான் மொஜ்தபா அங்கிருந்து வெளியேறியிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Leaked audio reveals Iran's new leader Mojtaba Khamenei narrowly evaded மொஜ்தபா காமேனி தப்பியது எப்படி? "மொஜ்தபா ஏதோவொன்றை செய்வதற்காக வளாகத்தின் முற்றத்திற்கு வெளியே சென்றுவிட்டு திரும்ப வேண்டும் என்பதே இறைவனின் கட்டளையாக இருந்தது. ஏவுகணையால் கட்டடத்தை தாக்கியபோது அவர் வெளியே மாடிப் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தார்" என்று கமேனியின் அலுவலகத்தின் நெறிமுறைத் தலைவர் மஸாஹர் ஹொசைனி, ஈரானிய அதிகாரிகளிடம் தனிப்பட்ட சந்திப்பில் கூறியதாக The Telegraph செய்தி வெளியிட்டுள்ளது. மொத்தம் மூன்று ஏவுகணை ஈரானின் முக்கிய வளாகத்தின் மீதான அந்த தாக்குதலில் குறைந்தது மூன்று ஏவுகணைகள் தாக்கியதாக லீக்காகியிருக்கும் ஆடியோவின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. ஒரு ஏவுகணை அலி காமேனி இருந்த பகுதியை தாக்கியதாகவும், மற்றொன்று மேல் தளத்தில் இருக்கும் மொஜ்தபாவின் இல்லத்தை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மொஜ்தபாவும், ஹொசைனியும் காலில் சிறு காயத்துடன் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. ஈரானின் ராணுவத் தளபதி முகமது ஷிராசி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டது குறித்தும் அந்த ஆடியோவில் விவரிக்கப்பட்டிருந்தது. "அவர் துண்டு துண்டாக சிதறிப்போனார். அவரிடமிருந்து அவர்களால் எதையும் கண்டறிய முடியவில்லை. இறுதியில் அவர்கள் சில கிலோ எடையுள்ள சதையை கண்டுபிடித்து, அதை அவருடைய உடல் என்று அடையாளம் கண்டனர்" என ஆடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பவர்புல் ஏவுகணை மூன்றாவது ஏவுகணை மொஜ்தபாவின் மைத்துனர் மிஸ்பா அல்-ஹுதா பகேரி கானியின் இல்லத்தின் மீது தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஏவுகணை மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால், அது வேகமாக கீழே விழுந்து, அவரின் தலையை பாதியாக வெட்டியது" என்று அதில் ஹொசைனி பேசியிருக்கிறார். அயாத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டது மட்டுமின்றி, மொஜ்தபா அலி காமேனி உயிர் தப்பித்தது குறித்தும் இந்த ஆடியோவில் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!