யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்புப் பகுதியில் இன்று (02) அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்புச் சம்பவத்தில் 32 வயதுடைய செல்வராசா கசிவன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மடு மாதா ஆலய யாத்திரைக்காகப் புறப்படும் வேளையில் நேற்றிரவு பட்டாசுகள் கொளுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், அவற்றில் வெடிக்காமல் விடுபட்ட பட்டாசு ஒன்றை மீண்டும் வெடிக்கச் செய்வதற்காக செல்வராசா கசிவன் அருகில் சென்று ஊதிப் பார்த்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பட்டாசு திடீரென வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் மரண விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!