யாழ். மணல்காடு பகுதியில் வீடுபுகுந்து 05 பவுண் நகை கொள்ளை!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணல்காடு சந்திப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள், தம்பதியினர் மீது தாக்குதலை நடத்திவிட்டு 05 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பொலிஸார் மீதான கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 1:00 மணியளவில், வீட்டின் மதிலால் பாய்ந்து உள்ளே நுழைந்த மூன்று கொள்ளையர்கள் இக்கோரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
முதலில் வீட்டில் ,ருந்த கணவனைத் தாக்கிய கொள்ளையர்கள், பின்னர் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுண் பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்து எடுத்துள்ளனர்.
நகையை அபகரித்த பின்னரும் கொள்ளையர்கள் அப்பெண்ணை விடுவிக்கவில்லை. சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக அத்தம்பதியினர் மீது மணல் மண்ணை அள்ளிக் கொட்டியும், இரும்புக் கம்பிகளாலும் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த கணவர் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் நடந்துகொண்டிருந்த போதே, பாதிக்கப்பட்ட தரப்பினரால் மருதங்கேணி பொலிஸாருக்கும், அவசர பொலிஸ் இலக்கங்களான 119 மற்றும் 118 ஆகியவற்றுக்கும் பலமுறை அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
,இருப்பினும், சுமார் 8 மணிநேரம் தாமதித்தே, அதாவது காலை 9:15 மணியளவிலேயே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர். பொலிஸாரின் இந்த மந்தகதிச் செயல் அப்பகுதி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீட்டில் இடம்பெறும் மூன்றாவது கொள்ளைச் சம்பவம் ,துவென்பது குறிப்பிடத்தக்கது. இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களின் உருவங்களும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன. அந்த
ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Comments
Leave a Reply
Write the comments...............