news@ilakkiyainfo.com

பிரிவுகள்

லண்டனில் சர்ச்சையில் சிக்கிய சோனம் கபூர்: “பண பலத்தால் மிரட்டல்” என குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு

26 May, 2026

Sonam Kapoor மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா லண்டனில் வாங்கியுள்ள சொகுசு வீடு தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.

இந்த தம்பதியினர் கடந்த 2023ஆம் ஆண்டு லண்டனின் பிரபலமான Notting Hill பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான மேன்ஷன் ஒன்றை சுமார் 270 கோடி ரூபாய் செலவில் வாங்கியிருந்தனர். தற்போது அந்த வீட்டை மேலும் நவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட சொகுசு மாளிகையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், அந்த வீட்டில் பணியாற்றவுள்ள ஊழியர்களுக்காக அருகிலுள்ள Hillcrest அபார்ட்மெண்டில் சுமார் £4 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.51.4 கோடி) செலவில் ஐந்து பிளாட்கள் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடவடிக்கையே தற்போது அப்பகுதி குடியிருப்புவாசிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, குடியிருப்பு வளாகத்தில் ஊழியர்களுக்கான quarters அமைப்பது தொடர்பாக பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சில குடியிருப்புவாசிகள் லண்டன் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டிகளில், “இந்த விவகாரம் குறித்து வெளியில் பேச வேண்டாம் என பணபலத்தை பயன்படுத்தி அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என குற்றம்சாட்டியுள்ளனர்.

அதேவேளை, அந்த அபார்ட்மெண்டில் அதிகளவிலான பிளாட்களை வாங்கியுள்ளதால், குடியிருப்பு நிர்வாக முடிவுகளில் அவர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் சிலர் கவலை வெளியிட்டுள்ளனர். “கோடீஸ்வரர்களுக்கு எதிராக பேசவே பயமாக உள்ளது” எனவும் ஒருவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தற்போது லண்டன் சமூக வட்டாரங்களிலும் இந்திய திரையுலக ரசிகர்களிடையிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!