ஈரான் வளைகுடா நாடுகளின் கடல்நீர் சுத்திகரிப்பு விநியோகத்தை சீர்குலைக்குமா?
23 Mar, 2026
அக்காலத்தில் இவ்வழியே வரும் பல நாட்டு வணிகர்கள் அனைவருக்கும் புரியும் வகையில், இரண்டு வரி வடிவங்களிலும் இது எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் பூங்குன்றன். "ஸ்வஸ்திஸ்ரீ கோ இராசகேசரிப் பெருவழி திருநிழலு மன்னுயிருஞ் சிறந்தமைப்ப ஒருநிழல் வெண்டிங்கள் போலோங்கி ஒருநிழல்போல் வாழியர் கோச்சோழன் வளங்காவிரி நாடன் கோழியர் கோக்கண்டன்குலவு" என இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "சோழனின் குறியீடு சூரியன். பாண்டியர்களுக்கு சந்திரன். ஆனால் இந்த கல்வெட்டில் திங்கள் என்று குறிப்பிடுவதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை. அதேபோல இதில் 3 இடங்களில் குறிப்பிடப்படும் நிழல் என்பதற்கும் அர்த்தம் புரியாமலிருந்தது. கேரளாவைச் சேர்ந்த மொழியியல் அறிஞர் ஒருவர், இதை விளக்கினார். அதாவது அக்காலத்தில் மன்னர்கள் பயணம் செய்யும்போது, அவர்களுக்கு சீருடையில்லாமல் பாதுகாப்புக்குச் செல்லும் படையைக் குறிப்பதுதான் அந்த நிழல். மன்னரே இல்லாத இப்பகுதியில் எதற்கு இந்த நிழல் படை என்ற கேள்வி எழும். அது வணிகர்களையும், மக்களையும் காப்பதற்கு மன்னரால் உருவாக்கப்பட்ட படையைக் குறிக்கிறது" என்கிறார் பூங்குன்றன். 'கோ கண்டன்- ஆயிரம் வீரர்களைக் கொன்றவன்'இந்த கல்வெட்டைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று யாக்கை மரபு அறக்கட்டளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது
கொங்கு நாட்டையும் முதலாம் ஆதித்த சோழன் வென்றதற்கு இந்த கல்வெட்டும் ஒரு சான்று என்று கூறும் பூங்குன்றன், அந்த மன்னனைப் பற்றி மேற்கு மண்டலத்தில் வேறு எங்கும் கல்வெட்டு கிடைத்ததில்லை என்கிறார். இந்தக் கல்வெட்டில் கோ கண்டன் என்றொரு வார்த்தை இடம்பெற்றுள்ளது. "ஆயிரம் வீரர்களைக் கொன்றவருக்குதான் கோ கண்டன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிற்காலச் சோழர்களில், முதலாம் ஆதித்தன், இரண்டாம் இராஜராஜன் இருவருக்கும்தான் இந்த கோ கண்டன் என்ற பெயர் தரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகே தில்லை தானம் என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டின்படி, 'தொண்டை நாட்டில் பாவிய இராசகேசரி' என்பது முதலாம் ஆதித்தனை மட்டுமே குறிக்கும். அதனால் இது முதலாம் ஆதித்தனால் உருவாக்கப்பட்ட பெருவழிக் கல்வெட்டு என்பது உறுதி" என்றார் பூங்குன்றன். நிழல்படை நிழல்படை என்பது வணிகர்களையும், மக்களையும் காப்பதற்கு மன்னரால் உருவாக்கப்பட்ட படை என்கிறார் பூங்குன்றன் ஆனால், இந்த இராஜகேசரிப் பெருழியை உருவாக்கியது ஆதித்த சோழன் அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பெருவழி பயன்பாட்டில் இருந்தாலும், அந்தப் பாதையில் வணிகர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தன் பெயரைச் சூட்டியது முதலாம் ஆதித்த சோழன்தான் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் சி.ஆர். இளங்கோவன். "வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வாணிகம் செய்ய வந்தவர்கள், வெகுகாலமாக கேரள கடற்கரைக்கு வந்து, அங்கிருந்து கடல் வழியாகவே தஞ்சாவூர் கடற்கரைப் பகுதியை வந்தடைந்தனர். தரைவழியில் செல்வதற்கான பாதையின் நடுவே மேற்குத் தொடர்ச்சி மலை இருப்பதால், அது காடாக இருக்குமென்று கருதியுள்ளனர். பாலக்காடு கணவாய் வழியாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பழமையான ஒரு பாதை இருப்பதை பின்பே கண்டறிந்துள்ளனர். அந்த வழிதான் இராசகேசரிப் பெருவழி" என்கிறார் அவர். இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள ஒரே பழமையான பெருவழிசோழர்களின் ஆட்சிப் பரப்பு பரந்து விரிந்த காலகட்டத்தில் கொங்கு நாட்டில் நிர்வாக ரீதியாகப் பதிவு செய்த முதல் கல்வெட்டு என்று இதைக் கூற முடியும் என்கிறார் குமாரவேல் ராமசாமி
ரோமானிய நாணயங்கள் "தஞ்சாவூர் பகுதியிலுள்ள பூம்புகார் போன்ற ஒரு துறைமுகத்திலிருந்து, கேரளாவின் கோழிக்கோடு போன்ற துறைமுக நகரத்தை இணைக்கின்ற பாதையாக இந்த இராசகேசரிப் பெருவழி இருந்திருக்கலாம். தோராயமாக 500 கி.மீ. துாரமுள்ள இந்த வழி, வணிகத்துக்கு பெரும் பங்காற்றியுள்ளது. அதனால் கொள்ளையர்களிடமிருந்து வணிகர்களையும், பொருட்களையும் காப்பாற்ற ஒவ்வொரு 50 கி.மீ. துாரத்துக்கும் நிழல் படை அமைத்து, பொருள் பாதுகாப்பு அறை போன்ற ஓர் அமைப்பை சோழ மன்னன் ஏற்படுத்தியதையே இந்த கல்வெட்டு சுட்டிக்காட்டுகிறது" என்கிறார் சி.ஆர். இளங்கோவன். மேற்கு பகுதியில் 20 பெருவழிகள் இருந்ததாகவும் அதில் இந்த இராசகேசரிப் பெருவழிதான் மிக முக்கியமானதாக இருந்தது என்று குறிப்பிடும் பூங்குன்றன், இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலிருந்து கிழக்குக் கடற்கரையை இணைக்கும் இந்தப் பெருவழியைப் பயன்படுத்தி, ரோமானியர்கள் வணிகம் செய்தனர் என்கிறார். இந்தியாவில் கிடைக்கும் ரோமானிய நாணயங்களில் 80 சதவீதம் மேற்கு பகுதியில்தான் கிடைத்தது என்கிறார் அவர்.இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள ஒரே பழமையான பெருவழி இதுதான் என்று இளங்கோவன் கூறுகிறார்
இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பெருவழிக்கு, ஓரிரு கி.மீ. துாரத்தில்தான், தற்போதுள்ள சேலம்– கொச்சி நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது. புறவழிச்சாலை அமைக்கப்படுவதற்கு முன்பே, பல ஆண்டுகளாக அந்த சாலையே பிரதான சாலையாக பயன்பாட்டில் இருந்தது. கல்வெட்டு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அறிவொளி நகர் என்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வாரியக் குடியிருப்பு உள்ளது. சற்று தொலைவில் மேற்குப் புறவழிச்சாலை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அதனால் மனிதர்களாலோ, இயற்கையாலோ இந்த கல்வெட்டு அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இராசகேசரிப் பெருவழி கல்வெட்டு குறித்து, கோவை மாவட்ட தொல்லியல் அலுவலர் (பொறுப்பு) சுரேஷிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ''அந்த கல்வெட்டைப் பாதுகாப்பது குறித்து, இதுவரை எந்த கோரிக்கையும் தொல்லியல் துறைக்கு வரவில்லை. ஆனாலும் அதன் முக்கியத்துவம் கருதி, அந்த கல்வெட்டை ஆய்வு செய்து, தேவைப்படின் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.கொங்கு நாடு வணிக வழிகளின் பிரதான சந்திப்பு என்று பெயர் பெற்றிருந்தது, அதில் முக்கியமானது இந்த இராசகேசரிப் பெருவழி என்கிறார் வரலாற்று ஆய்வாளர் இளங்கோவன்
Comments
Leave a Reply
Write the comments...............