news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வாழைச்சேனையில் விபத்து: இளைஞன் பலி; மூவர் படுகாயம்

03 Jun, 2026
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை, பெட்டி கெம்பஸ் பகுதியில் திங்கட்கிழமை (01) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிறைந்துரைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பொலன்நறுவைக்குச் சென்று வீடு திரும்பும் போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். இவ்விபத்தில் ஆட்டோவில் பயணித்த 20 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவரில் ஒருவர் அநுராதபுர வைத்தியசாலையிலும், மற்றைய இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!