news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெசாக் வாரம் முழுவதும் விசேட பாதுகாப்பு ; சட்ட மீறல்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை

29 May, 2026

வெசாக் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கும் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டங்கள் தற்போது செயற்பாட்டில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், தன்சல்கள், வெசாக் வலயங்கள் மற்றும் அதிக மக்கள் கூடும் பகுதிகளில் சீருடை மற்றும் சிவில் உடையிலான பொலிஸ் அதிகாரிகள், புலனாய்வு பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கலாசாரத்திற்குப் பொருத்தமற்ற நடத்தை, அபாயகரமான வாகன ஓட்டம், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் உள்ளிட்ட சட்ட மீறல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அத்துடன், சந்தேகத்திற்கிடமான செயல்கள் அல்லது அபாயகரமான வாகன இயக்கங்கள் தொடர்பாக பொதுமக்கள் 070-4755600 என்ற WhatsApp இலக்கத்திற்கோ அல்லது 119 / 188 என்ற அவசர தொலைபேசி

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!