வெனிசூலாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த இரட்டை நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளுக்குள் எட்டு நாட்கள் (100 மணித்தியாலங்களுக்கும் மேலாக) உயிருடன் சிக்கியிருந்த நபர் ஒருவர் சர்வதேச மீட்புக்குழுவினரின் அசாத்திய முயற்சியால் அற்புதமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹெர்னான் கில் (Hernán Gil) என்ற பாதுகாப்பு அதிகாரியே (Security Guard) இவ்வாறு மீட்கப்பட்டவராவார். இவர் கட்யா லா மார் (Catia La Mar) பகுதியில் உள்ள ‘கலேரியாஸ் பிளாயா கிராண்டே’ (Galerias Playa Grande) வணிக வளாகத்திற்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தின் பாதாளப் பகுதியில் (Basement) சிறிய கொன்கிரீட் சாவடி ஒன்றில் பணியில் இருந்தபோதே ஜூன் 24 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அவர் இருந்த சிறிய கொன்கிரீட் சாவடியானது, அவரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் போல் அமைந்து, அவர் மீது விழுந்த 140 தொன் எடையுள்ள இடிபாடுகள் அவரை நசுக்காதவாறு பாதுகாத்துள்ளது. “தனக்கு ஒரு நகம் கூட நசுங்கவில்லை” என்று ஹெர்னான் கில் மீட்புக்குழுவினரிடம் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார்.
மீட்புக் குழுவினர் சிறிய துளையிட்டு ஹெர்னான் கில்லுக்கு நீர், குளுக்கோஸ் (Intravenous Drip) போன்றவற்றை வழங்கியதுடன், தூசியிலிருந்து பாதுகாக்க முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகளையும் (Goggles) வழங்கினர்.
சிறிய கெமரா மூலம் அவரது நிலை கண்காணிக்கப்பட்டது. அவர் மிகவும் மகிழ்ச்சியான மனிதராகக் காணப்பட்டார் என்றும், தனக்கு விருப்பமான சுவைகளில் குளிர்பானங்களைக் கேட்டு வாங்கிப் பருகியதாகவும், மீட்புக்குழுவினரைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தியதாகவும் மெக்சிகோ செஞ்சிலுவைச் சங்கத்தின் மார்கோ அன்டோனியோ தெரிவித்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!