news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஹட்டனில் மண்மேடு சரிந்தது: ஒருவர் உயிரிழப்பு, பலரைக் காணவில்லை; 2,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

03 Aug, 2026
ஹட்டன், பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், இதுவரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 82 வயதான பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.00 மணி நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். 

அம்பகமுவ பகுதியில் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன இருவர் உட்பட மொத்தம் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!