ஓமன் கடலில் துள்ளிக்குதித்த அரிய வகை இளஞ்சிவப்பு டால்பின்கள் -வீடியோ
24 Oct, 2026
தீப்பிடித்து எரிந்த தலை
அந்த வீடியோவில், இளைஞர் ஒருவருக்கு பையரிங்க் ஹேர் கட் செய்வதற்காக சலூன் கடையில் இருக்கும் நபர் தயாராகுகிறார்.
அப்போது அவர் அந்த இளைஞரின் தலையில் தீப்பிடிப்பதற்கான பொடியை சற்று அதிகமாக தூவியதாக தெரிகிறது.
இருந்தாலும் அந்த இளைஞரின் தலையை தவிர மற்ற இடங்களை துணியால் முழுவதும் மூடியிருக்கிறார்.
தொடர்ந்து அந்த இளைஞரின் தலையில் தீயை பற்ற வைக்கிறார். தீயை பற்ற வைத்த அடுத்த நொடி அவரது தலை முடி முழுவதும் தீப்பிடித்து எரிகிறது. முடி திருத்துபவரும் தன்னால் முயன்ற அளவுக்கு வேகமாக ஹேர் கட் செய்ய முயல்கிறார்.
அய்யோ..அம்மா..
என கதறியபடி ஆனால் அவரால் வேகமாக செயல்பட முடியவில்லை. மேலும் தீயும் மளமளவென பற்றி எரிந்ததால் அந்த இளைஞர் வலி தாங்க முடியாமல் கதறுகிறார்.
இதனால் முகம் மற்றும் உடலை மூடியிருந்த துணியால் அந்த இளைஞர் தீயை அணைக்க முயல்கிறார்.
ஆனாலும் தீ அணைந்தாபாடில்லை. இதனால் வலி தாங்க முடியாமல் அய்யோ..அம்மா.. என கதறியபடி சலூனை சுற்றி.. சுற்றி.. ஓடுகிறார்.
முடி வெட்டிக்கொண்டிருந்தவரும் தீயை அணைக்க இளைஞரின் பின்னாலேயே ஓடுகிறார். எனினும் அந்த இளைஞர் கதறிக்கொண்டு அங்கும் இங்குமாக ஓடுகிறார். இவ்வாறு அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், ''வாபி பகுதியை சேர்ந்த ஆரிப் என்ற இளைஞர் தலையில் தான் தீப்பிடித்தது என்றும் உடனடியாக அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தீவிர் சிகிச்சை அளிப்பதற்காக தற்போது அவர் சூரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சலூன் கடைக்காரர் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினர்.
ஹேர் கட் செய்ய சென்ற இளைஞரின் தலை தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!