ஃபோக்ஸ்வாகனின் ஊழலை அம்பலப்படுத்தி உலகையே அதிர வைத்த தமிழர்!
அமெரிக்காவிலுள்ள மேற்கு விர்ஜினியாப் பல்கலைக்கழகத்தில் ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றுபவர் அரவிந்த் திருவேங்கடம்.
அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த தமிழரான அரவிந்துக்கு தற்போது வயது 32. தானியங்கித் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான அரவிந்துக்கு, அடிக்கடி நீண்ட மகிழுந்துப் பயணம் மேற்கொள்ளுவது பிடித்தப் பொழுதுபோக்கு.குறிப்பாக, சோதனை ஓட்டத்திற்கென்றுக் கொடுக்கப்படும் வாகனங்களைச் சோதிப்பதற்காக நெடுந்தூரம் ஓட்டிச் செல்வது இவரது வாடிக்கை.
அப்படித்தான் அண்மையில், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் ’பஸாட்’ காரை ஓட்டிச் சென்ற அரவிந்திற்கு, அது ஒரு வரலாற்று நிகழ்வாக அமையப்போகிறது என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.
காரணம் புகை வெளியிடும் அளவை நிர்ணயிக்கும் ஈ.பி.ஏ கட்டுப்பாட்டு விதிகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச அளவை விட, இந்த வாகனத்தின் புகை வெளியேற்ற அளவு 20 மடங்கு அதிகமாக இருந்தது.
இதேபோல ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான ’ஜெட்டா’ விலும் 15 முதல் 35 விழுக்காடு அதிகப் புகை வெளியேறியிருக்கிறது.
காற்றில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும், மோனோ நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற காரீயத்தை (Lead) சுற்றுச்சூழலில் அளவிற்கு அதிகமாக வெளியிடும் போதிலும், அந்த அளவைக் குறைத்துக் காட்டுமாறு, ஏமாற்றுத் திறன் வாய்ந்த ஒரு மென்பொருளை இந்த வாகனங்களில் பொருத்தியிருக்கிறது இந்த நிறுவனம்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!