news@ilakkiyainfo.com

பிரிவுகள்

30 பேருடன் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த பஸ். : 13 பேர் படுங்காயம் (படங்கள்)

22 Aug, 2015

ஹொரணையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று காலை 07.30 மணியளவில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் வூட்லேண்ட் பகுதியில் பிரதான வீதியை விலகி 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

vlcsnap-2015-08-22-08h27m06s185 இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 30 பேரில் 13 பேர் படுங்காயமடைந்து வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Still0822_00001 இதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

DSC02306 சாரதிக்கும் ஏனைய 17 பேருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் இதில் சிறுவர்கள் இருந்ததாகவும் பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

DSC02296இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

vlcsnap-2015-08-22-08h55m06s7811898796_1618983555056162_3412078019136527267_nbus-acc-www.nethfm.com00004-600x360

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!