இந்தநிலையில், சாத்தான்குளம் சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் அதை நியாயப்படுத்தும் வகையில் பதிவிட்ட சென்னை ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
சதீஷ் முத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில், `டேய் தம்பிகளா, வாங்க அடுத்த லாக் அப் டெத்துக்கு ஆள் கிடைக்கலன்னு பார்த்தோம். ஆள் கிடைச்சிருச்சு. உங்களுக்கு ஆசனவாய் இருக்குதா தம்பிகளா?’ என்று நேற்று பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக புகார் எழுந்தநிலையில், அவரிடம் காவல்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
அப்போது, தனது ஃபேஸ்புக் கணக்கு விவரங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவும் அவர்கள் இதுபோன்ற கமெண்டுகளைப் போட்டிருக்க வாய்ப்பிருப்பதாக சதீஷ் முத்து விளக்கமளித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆனால், கடந்த சில மணி நேரத்துக்கு முன், தனது ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக சதீஷ் முத்து பதிவிட்டிருந்ததும் சைபர் கிரைம் போலீஸார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இதனால், அவரது பதிலும் ஃபேஸ்புக் பதிவும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தநிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அவரை பணியிடைநீக்கம் செய்து சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டிருக்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!