உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. விபத்தில் சிக்கியவரின் உடலை கண்ணியமற்ற முறையில் போலீசார் கையாண்டதற்கு எதிராக கடும் விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன. வீடியோ வைரலாகி போலீசாரின் செயல்பாடு விமர்சனத்திற்கு உள்ளானதையடுத்து, மீண்டும் ஆற்றில் வீசிய சடலத்தை எடுத்த போலீசார் பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் போலீசார் சடலத்தை ஆற்றில் வீசியதும் பின்னர் ஆற்றில் இருந்து சடலத்தை எடுத்தது என இரண்டு வீடியோக்களுமே பீகாரில் வேகமாக பரவி வருகிறது. உயிரிழந்த நபரின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், இந்த சம்பவம் குறித்த முதலில் விளக்கம் அளித்த போலீசார், உயிரிழந்த நபரின் உடல் பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சாலையில் சிக்கி கிடந்த உடலின் சில பாகங்கள் மட்டுமே ஆற்றில் வீசப்பட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால், சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோவில், பாலத்தில் இருந்து சடலத்தை போலீசார் ஆற்றில் வீசும் காட்சிகள் தெளிவாக தெரிந்தன. இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், " போலீசார் தவறு செய்து இருந்தால் விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். பீகாரில் போலீசாரின் கண்ணியற்ற முறை செயலுக்கு கடும் கண்டனங்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.बिहार पुलिस की शर्मनाक करतूत, सड़क दुर्घटना में मृत शख्स के शव को उठाकर नहर में फेंका. 📍फकुली, मुजफ्फरपुर pic.twitter.com/fE7CRMYo3R
— Utkarsh Singh (@UtkarshSingh_) October 8, 2023
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!