இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
பகுப்பாய்வு
லைஸ் டௌசெட்
முதன்மை சர்வதேச செய்தியாளர்
இந்தப் போர் தெளிவான முடிவின்றி நடந்துவருவதால், இந்த ஆண்டின் ஐநா பொதுச்சபையில் யுக்ரேன் குறித்த விவாதம் ஆதிக்கம் செலுத்தியது. ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் வியக்கத்தக்க வகையில் தெளிவின்றியும், வேதனையோடும் இருந்தார்.
அவர் சென்ற இடங்களிலெல்லாம் இதுபற்றிக் கேட்டதைப் பகிர்ந்துகொண்டார்.
விடுமுறையில் நண்பர்களுடன் செல்வது தொடங்கி, இந்த வாரம் ஐநா பொதுச்சபையில் உலகத் தலைவர்களுடன் அவர் கலந்து கொண்டதுவரை பட இடங்களிலும் பலரும் இந்தப் போர் எப்போது முடிவடையும் என்று அவரிடம் கேட்டுள்ளனர்.
இந்தப் போரை நிறுத்துங்கள், "என்னால் மின்சாரக் கட்டணம் செலுத்த முடியவில்லை" என்று பலரும் திரும்ப திரும்ப கூறியது அவருக்கு வருத்ததைத் தந்திருக்கிறது.
ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய தடைகள்தான் இந்தத் துன்பத்திற்குக் காரணம் என்ற கருத்தை ரஷ்யா ஏற்படுத்தியுள்ளதால் இந்தப் போர் தொடர்பான உரையாடலில் ஆதிக்கம் செலுத்த ஐரோப்பாவும் அதன் நட்பு நாடுகளும் திணறிவருவதாக பலர் தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்ததைப் பொதுவில் பகிர பொரெல் தயாராக இருந்தார்.
அணு ஆயுதம் உட்பட மாஸ்கோவின் புதிய மற்றும் கவலையளிக்கும் அச்சுறுத்தல்கள் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
பொரெல் உட்பட பெரும்பாலான மேற்கத்திய தலைவர்கள் யுக்ரேன் மற்றும் பிறநாடுகளுக்கு ஏற்படும் தொலைநோக்கு விளைவுகளைக் கவனத்தில் எடுத்து, இந்தப் போரில் தொடர்ந்து இருக்க வேண்டியதன் அவசியத்தில் திட்டவட்டமாக உள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத விநியோகம் குறைவாக உள்ளது என்ற கவலையை பொரெல் நிராகரித்தார், மேலும், யுக்ரேனுக்கு தொடர்ந்து ராணுவ ஆதரவை வழங்க வேண்டும் என்றும், அதிபர் புதின் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்றும், ராஜதந்திர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த மோதல் காரணமாக எரிசக்தி விலைகள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
"எங்கள் நாட்டில் உள்ள மக்கள் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்தால் தங்களால் வேலை செய்ய முடியாது, தொழிலை தொடர்ந்து நடத்த முடியாது" எனத் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறும் அவர், இதே மாதிரியான கவலை ஆப்ரிக்க, தென் அமெரிக்க, தென்கிழக்கு ஆசிய தலைவர்களிடமும் வெளிப்பட்டதாக கூறுகிறார்.
'டேங்கோ நடனமாட, உங்களுக்கு இரண்டு தேவை'என்று கூறி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தனது பங்கை ஆற்றுமாறு புதினுக்கு பொரெல் அழைப்பு விடுத்திருக்கிறார்.
மாஸ்கோவிற்கும், கிரெம்ளினுக்கும் புதினுடன் பேசச் சென்ற அனைவரும், எனக்கு இராணுவ நோக்கம் உள்ளது.
அந்த நோக்கங்களை அடையவில்லை என்றால் நான் போராட்டத்தைத் தொடர்வேன் என்ற புதினின் ஒரே பதிலுடன் திரும்பி வந்தனர். இது நிச்சயமாக கவலைக்குரிய போக்கு எனக் கூறும் பெரொல் தாம் தொடர்ந்து யுக்ரேனை ஆதரிக்க வேண்டும் என்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!