அதிக போதையில் காணப்பட்ட நபர் மேலும் மதுபானம் அருந்த பணம் கேட்டு தாய் மீது தாக்குதல்!
வாரியபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென்னகோன் கிராமத்தைச் சேர்ந்த 69 வயதுடைய தாயே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி நிகவெரட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.
ஒரு பிள்ளையின் தந்தையான தாயைத் தாக்கிய மகன் மதுபோதைக்கு அடிமையாகியிருந்தவர் என்றும், அவரது மனைவி வெளிநாட்டுத் தொழிலுக்குச் சென்றதால் தனது மகனின் 14 வயது மகளைப் பார்த்துக் கொள்வதற்காக சந்தேக நபரின் தாய் தனது மகனின் வீட்டுக்கு வந்து தங்கியிருந்துள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில் அதிக மது போதையில் வந்துள்ள மகன் வீட்டின் கதவைத் தாக்கியுள்ளார். சப்தம் கேட்டு அவரது தாய் வெளியே வந்தபோது தனது தாயிடம் மதுபானம் வாங்குவதற்கு பணம் கேட்டு தாயின் கையைக் கடித்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், பின்னர் அங்கு வந்த அயலவர்கள் தாயை நிகவெரட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் வாரியாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!