இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
நமது உடலுக்குள் புற ஊதா கதிர்கள் கொண்ட ஒளிகள் அல்லது அதிக சக்தி வாய்ந்த ஒளிகளை செலுத்தி கொரோனாவை கொல்ல வேண்டும். நமது உடலுக்கு உள்ளேயோ அல்லது உடலின் மேற்பரப்பிலோ இப்படி நாம் அதிக சக்தி வாய்ந்த ஒளியை அனுப்ப வேண்டும்.
மருந்தை செலுத்த வேண்டும் மருந்தை செலுத்த வேண்டும் நமது உடலுக்கு எப்படி மருந்தை செலுத்துகிறோமோ அதேபோல் செலுத்த வேண்டும். நீங்கள் இதை இன்னும் டெஸ்ட் செய்யவில்லை. இதை சோதனை செய்து பார்க்க வேண்டும்.
இந்த ஒளிகள் கொரோனாவை ஒரே நொடியில் கொன்றுவிடுகிறது என்று கேள்விப்பட்டேன். இதனால் உடலுக்குள் இப்படி ஒளியை செலுத்தி மொத்தமாக நமது உடலை சுத்தம் செய்ய வேண்டும்.
ஆர்வம் அளிக்கிறது
இந்த ஒளியை நமது உடலின் இதயத்திற்குள் செலுத்த வேண்டும். எனக்கு இந்த ஐடியா மிகவும் ஆர்வம் அளிக்கிறது என்று டிரம்ப் கூறினார். டிரம்ப்பின் இந்த திட்டத்தை பார்த்து அங்கிருந்த செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதோடு அங்கிருந்த விஞ்ஞானி வில்லியம் பிராயன் டிரம்ப் சொன்னதற்கு எப்படி பதில் தருவது என்று குழம்பி போனார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
பெரிய அளவில் கொந்தளிப்பு
டிரம்பின் இந்த பகீர் ஐடியாவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீங்கள் ஒரு வளர்ந்த நாட்டின் அதிபர். நீங்கள் கொஞ்சமாவது பொறுப்போடு பேச வேண்டும் என்று மக்கள் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.
அதேபோல் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர்கள் இது தொடர்பாக விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவது எந்த வகையிலும் சரியானது இல்லை என்று கூறியுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!