பிறந்த சில மணி நேரத்தில் தெனவேட்டாகப் படுத்து இருந்த குழந்தை!
20 Oct, 2026
மிகவும் அரிதான சூழல்
“இந்த அரிதான சூழலில் ஒரு உயிரினம் ஒருபுறத்தில் ஆண் தன்மைகளையும் மற்றொரு புறத்தில் பெண் தன்மைகளையும் கொண்டிருக்கும்” என்கிறார் அவர்.
இந்த பறவை குறித்து பறவையினங்கள் குறித்து வெளியிடப்படும் ஆய்விதழான ’ஃபீல்ட் ஆர்னிதாலஜி’ எனும் இதழில் பேராசிரியர் ஹேமிஷ் ஸ்பென்சர், ஜான் முரில்லோ உள்ளிட்டோருடன் இணைந்து கட்டுரை எழுதியுள்ளார்.
“இந்த அதிசயம், அதிகளவில் விலங்குகளிடையே காணப்படுகிறது. அதில் பெரும்பாலானவை இருவகையான பாலியல் பண்புகளை கொண்டிருக்கும் (பெரும்பாலும் எளிதில் கண்டறிய முடியும்)” என்கிறார் அவர்.
இது, 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த இனங்களில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது உதாரணம்.
"பொதுவாக இருபாலுயிரிகள் ஆண்-பெண் பாலுறுப்புகளை தனித்தனியே கொண்டிருக்கும். இது அவற்றின் பாலின நிர்ணயம் மற்றும் பாலியல் நடத்தை பற்றிய நமது புரிதலுக்கு முக்கியம்” என, ஒட்டாகோ பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் பேராசிரியர் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார்.
“ஆனால், ஒருபுறம் ஆண் தன்மையும் மறுபுறம் பெண் தன்மையும் கொண்ட இந்த பறவையில், இருபுறமும் பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ இருக்கலாம்,” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருபால் பறவையாக உருவெடுத்தது எப்படி?
"இருபால் இறகுகளை பறவைகள் கொண்டிருப்பது, உடல் முழுவதும் உள்ள ஹார்மோன் வேறுபாட்டைக் காட்டிலும் அதன் அருகே அமைந்திருக்கும் செல்களின் குரோமாசோம்கள் அமைப்பால் ஏற்படுகிறது,” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இது, பல்வேறு பூச்சியினங்களிடையே காணப்படுகிறது. குறிப்பாக, பட்டாம்பூச்சிகள், கணுக்காலிகள், சிலந்திகளிலும் பல்லி, எலிகள் போன்ற கொறித்துண்ணிகளிலும் காணப்படுகிறது.
இந்த நிகழ்வு "ஒரு முட்டையை உற்பத்தி செய்ய பெண்ணின் உயிரணுப் பிரிவின் போது ஏற்படும் பிழையிலிருந்து எழுகிறது, அதைத் தொடர்ந்து இரண்டு விந்தணுக்களால் இரட்டை கருத்தரித்தல் ஏற்படுகிறது" என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஹனி க்ரீப்பர் அதிசய பறவை 21 மாத கவனிப்பு
இரண்டாம் நிலை காடுகளின் பெரிய பகுதிகளைக் கொண்ட ஒரு பண்ணையான டான் முகெல் இயற்கை சரணாலயத்தில், பறவைகளுக்கான உணவு நிலையம் உருவாக்கப்பட்டது.
அங்கு பறவைகளுக்கு புதிய பழங்கள் மற்றும் சர்க்கரை தண்ணீர் வழங்கப்படுகிறது. இது பறவைகளை கண்காணிக்க சிறந்த இடமாக உள்ளது.
இந்த பறவை அங்கு "குறைந்தபட்சம் 21 மாதங்கள் இருந்தது. மேலும் அதன் நடத்தை, மற்ற பச்சை ஹனி க்ரீப்பர் இன பறவைகளுடன் பொருந்துகிறது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அப்பறவை, “மற்ற பறவைகளிடமிருந்து தனித்திருந்தது. மேலும், அதன் இனத்தைச் சேர்ந்த மற்ற பறவைகளுக்கு உணவளிக்க விடாமல் தடுத்தது,” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் அந்த பறவை அப்படி செய்கிறது என்பதை தங்களால் உறுதியாக கூற முடியவில்லை என ஆய்வாசிரியர்கள் சுட்டிக்காடுகின்றனர்.
“பொதுவாகவே அந்த இனத்தின் மற்ற பறவைகளை அந்த பறவை புறக்கணிக்கிறது. மற்ற பறவைகளும் அதை புறக்கணிக்கின்றன. எனவே, அந்த பறவைக்கு இனப்பெருக்கம் செய்வதற்கான எந்த வாய்ப்பும் கிடைத்திருக்காது” என அந்த அறிக்கை கூறுகிறது.
அந்த பறவை தன் வாரிசுகளை விட்டுச்செல்லா விட்டாலும் ஏற்கனவே விலங்குகள் ராஜ்ஜியத்தில் அதன் அடையாளத்தை உருவாக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை.
பிபிசி தமிழ்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!