news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

01 Jun, 2023
இன்று முதல் அமுலாகும் வகையில் சதொச நிறுவனம் மேலும் 6 அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ கிராம் கோது மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 210 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் 14 ரூபாவால் குறைக்கப்பட்டு 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 11 ரூபாவால் குறைக்கப்பட்டு 314 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 229 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. கடலை ஒரு கிலோகிராம் 05 ரூபாவால் குறைக்கப்பட்டு 545 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளை நாடு ஒரு கிலோகிராம் 04 ரூபாவால் குறைக்கப்பட்டு 175 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!