இந்திய-நேபாள எல்லையில் கைதான 3 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் ; தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நடவடிக்கை
26 Oct, 2026
12 வயதிருக்கும்போது புத்த விகாரை ஒன்றின் தலைமை குரு ஒருவர், அநுரவை துறவறத்துக்கு அனுப்புமாறு கேட்டார். அதனை நான் மறுத்து விட்டேன்.
அநுர பிறந்து ஆறாம் மாதத்தில் அவரது ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டியபோது, ’உங்கள் மகன் ஒரு நாள் அரசாள்வான்’ என்று அதிர்ச்சியோடு சொன்னார்.
எனது மகன் சாதாரண குடும்பத்திலிருந்து இன்று அதிபராகி உள்ளார். அவர் பொய் சொல்பவரோ, மோசடி செய்பவரோ கிடையாது. அனுராதபுரத்தில் உள்ள ஆலயங்களில் எனது மகனுக்காக பிரார்த்திக்க வேண்டும்” என தெரிவித்தார்.
சகோதரி ஸ்ரீயலதா கூறும்போது, “எனது தாயார் தினமும் இரவு தொலைக்காட்சியில் செய்திகளை பார்க்கிறார். செய்தியில் எனது சகோதரன் வரும்போதெல்லாம் என் மகனா என கேட்பார்.
மகனுடன் இருக்க அவர் விரும்புவார். என் சகோதரன் அநுரவும் இந்தப் பகுதிக்கு வரும்பொதெல்லாம் எங்களை பார்க்க வீட்டுக்கு வருவார். அவர் இந்த நாட்டின் இந்த பகுதிக்கு வரும்போதெல்லாம், எங்களை சந்திக்கிறார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, அநுர காரில் தூங்கியதுதான் அதிகம். அவரது பதவியேற்பு ஆரவாரமின்றி நடைபெற்றது. அவர் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்” என தெரிவித்துள்ளார்.
யார் இந்த திசாநாயக்க? - இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம எனும் பகுதியில் 24.11.1968-ல் அநுர குமார திசாநாயக்க பிறந்தார்.
தனது பள்ளி படிப்பினை தம்புத்தேகவில் உள்ள கமினி மகா வித்யாலயா பள்ளியிலும், தம்புத்தேகம மத்திய கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
1988-ம் வருடம் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி)யில் இணைந்தார். 1995-ம் ஆண்டு அதன் மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
2000-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் மூலம் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினராக ஆனார். 2004-ம் ஆண்டு அப்போதைய கூட்டணி ஆட்சியில் விவசாய அமைச்சராக அநுர குமார திசாநாயக்க பதவி வகித்தார்.
2014-ஆம் ஆண்டு ஜேவிபியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 418,553 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.
தொடர்ந்து இலங்கையில் ஊழலுக்கு எதிராக அநுர குமார திசாநாயக்க குரல் கொடுத்து வந்தார். மேலும், இலங்கையில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது நடைபெற்ற போராட்டங்களில் முன்நின்று நடத்தியதில் அநுர குமார திசாநாயக்க முன்னணி வகித்ததும் குறிப்பிடத்தக்கது.
2024-ம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 57,40,179 வாக்குகள் பெற்று ஜனாதிபதியானார். (நன்றி: தி ஹிந்து)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!