ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
இந்த நிலையில் நடிகை நதியா தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது சமீபத்தில் மலையாள தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியை நடிகர் முகேஷ் தான் நடத்தி வருகிறார். அப்போது முகேஷ் குறித்து அந்த நிகழ்ச்சியில் நதியா சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் 1986 ஆம் ஆண்டு சாமா என்ற படத்தில் தான் நான் முகேஷை முதல் முறை சந்தித்தேன்.
இந்த படத்தில் நான் முகேஷ் உடன் சேர்ந்து நடித்தேன். முகேஷ் சிரிக்காமல் ஜோக் அடிப்பதில் ரொம்பவே வல்லவர்.
சூட்டிங்கில் சில நாட்களில் நான் முகேஷ் காமெடிக்கு ரசிகையாகி விட்டேன். சூட்டிங் வந்தாலே முகேஷ் எங்கே இருக்கிறாரோ அங்கே தான் நானும் இருப்பேன்.
இதனால் மற்றவர்களுக்கு முகேஷ் மீது கடுப்பு. அதுபோல முகேஷ் ஒரு நாள் ஜோக் அடித்துக் கொண்டிருக்கும் போது நான் ஒரு நாள் சிரித்துக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் நான் என்னையும் அறியாமல் அவரைப் பார்த்து "யூ ஆர் குட் ஜோக்கர்" என்று சொன்னேன். அதைக் கேட்டு பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சிரித்தார்கள்.
அப்போது முகேஷ் முகம் மாறிவிட்டது. அதை நான் கவனித்தேன். அதனாலயே அவரை சீண்டி பார்ப்பதற்காக அவரை பார்க்கும் போதெல்லாம் ஜோக்கர் என்று சொல்லி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள் முகேஷ் என்னை கூப்பிட்டு எப்ப பார்த்தாலும் ஜோக்கர்னு கூப்பிட்டே இருக்க இனி அப்படி கூப்பிட்டா உனக்கு முத்தம் கொடுக்குதுடுவேன்னு சொன்னார்.
அதனால் நான் பயந்து போய் அவர்கிட்ட போகவே இல்லை. அப்போது அவர் இனி என்னை ஜோக்கர்னு சொல்லு பாப்போம் என்று வம்பு இழுத்தார்.
அப்போ நான் என்னுடைய உதட்டை மூடிக்கொண்டு ஓடிவிட்டேன். ஆனால் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் காரில் ஏறியதும் வெளியே தலையை நீட்டி "ஜோக்கர்" என்று முகேஷை பார்த்து கத்திவிட்டு போனேன். என்று அந்த பேட்டியில் நடிகை நதியா பேசியிருக்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!