அமெரிக்கா – இந்தியா வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவிடம் இருந்து சுமார் ரூ.27 ஆயிரம் கோடிக்கு நவீனரக விமானங்களை இந்தியா வாங்க முடிவு செய்துள்ளது.
இந்த விமானம் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு மற்றும் கடல்சார் கண்காணிப்பில் ஆற்றல் மிக்கது. இதற்காக ரூ. 3 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.27,000 கோடி) மதிப்பில் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீதம் வரி விதித்தார். இதனையடுத்து இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக முறுகல் உருவானது.
தற்போது இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு மீண்டும் வலுப்பெற்று வருகின்றது. எனவேதான் அமெரிக்காவிடம் இருந்து சுமார் ரூ.27 ஆயிரம் கோடிக்கு நவீனரக விமானங்களை இந்தியா வாங்க முடிவு செய்துள்ளது.
இந்திய கடற்படை தற்போது தமிழ்நாட்டின் அரக்கோணம் மற்றும் கோவாவில் அமைந்துள்ள விமானத் தளங்களில் கிழக்கு மற்றும் மேற்கு கடல்சார் பகுதிகளைக் கண்காணிக்க 12 P-81 ரக விமானங்களை பயன்படுத்தி வருகிறது.

தற்போது புதிதாக 6 பி-8ஐ விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பி -81 ரக கடல்சார் ரோந்து விமானம் போயிங் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த விமானம் 41,000 அடி உயரம் வரை பறக்கும்.
இந்த விமானத்தில் anti Ship ஏவுகணைகளை பொருத்த முடியும். அதேபோல் Cruise வகை ஏவுகணைகளை பொருத்தி துல்லியமாகத் தாக்குதல் நடத்த முடியும்.
AN/APY-10 ரேடார் உள்ளதால் துல்லியமாக படம் பிடிக்க முடியும். அதேபோல் MAD அமைப்பின் மூலமாக நீர்மூழ்கி கப்பல்களை கண்காணிக்கும் திறன் கொண்டது. பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த விமானம் கடல் ரோந்துப் பணியில் முக்கிய பங்காற்ற வல்லது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!