பிரா தொங்கும் வேலி; இதை பார்க்கவே குவியும் சுற்றுலாப் பயணிகள்: எங்கே இருக்கிறது தெரியுமா?
21 Nov, 2026
இரான் ஆட்சி இன்னும் வீழாமல் இருப்பது எப்படி?
15 அம்ச திட்டங்கள் என்ன?
முன்னதாக போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் 15 அம்சங்கள் கொண்ட திட்டத்தை இரான் பெற்றுள்ளதாக இரண்டு பாகிஸ்தான் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இரான் மீதான தடைகள் நீக்கம், இரான் தனது அணுசக்தி நிலையங்களை அகற்ற வேண்டும், அமைதி பயன்பாட்டுக்கான அணுசக்தி திட்டங்களில் ஒத்துழைப்பு, ஏவுகணை கட்டுப்பாடு, ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்துக்கு அனுமதி, சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் உள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தகவலின்படி, அமெரிக்க ராணுவம் சில படைகளை இரானுக்கு அனுப்பத் தயாராகி வருகிறது. ஆனால் அவை எங்கு அல்லது எப்போது என்பது துல்லியமாகத் தெரிவிக்கப்படவில்லை.
போராட்டங்களைப் பொறுத்தவரை, மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டாம் என்று இரானிய அதிகாரிகள் அறிக்கைகள் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்திகள் மூலமாகவோ அச்சுறுத்தி வருகின்றனர்.
இணையதளமும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது போராட்டக்காரர்களிடையே ஒருங்கிணைப்பை மிகவும் கடினமாக்குகிறது.
இதுவரை, போர் தொடங்கியதிலிருந்து நாட்டில் பெரிய அளவிலான ஆட்சி எதிர்ப்புப் போராட்டங்கள் வெடிப்பதை காண முடிவதில்லை.
இருப்பினும், பல்வேறு நகரங்களில் ஆட்சியின் ஆதரவாளர்கள் நடத்தும் இரவு நேரப் பேரணிகளை அரசு ஊடகங்கள் காட்டுகின்றன.
ஆனால், மார்ச் தொடக்கத்தில் பதவியேற்றது முதல் மக்கள் பொது வெளியில் இன்னும் பார்க்காத நபர் இரான் நாட்டின் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி ஆவார்.
இதுவரை, இரானிய ஊடகங்களில் அவரிடமிருந்து வந்த சில கடிதச் செய்திகளை மட்டுமே நாம் பார்த்துள்ளோம். அவரை இலக்கு வைப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
புதன்கிழமையன்று தெஹ்ரானில் எடுக்கப்பட்ட படம்
'இரானின் அதிகாரம் சிதறியுள்ளது'
அமெரிக்க இரானிய கவுன்சிலின் தலைவர் ஹூஷாங் அமிரஹ்மதி, அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டது, நாடு முழுவதும் உள்ள அதிகாரிகளிடையே அதிகாரக் கட்டமைப்பைச் சிதறடித்துள்ளது என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
'முன்பு அதிகாரம் காமனெயி எனும் ஒரே மனிதரிடம் இருந்தது. அதனால் அவர் இறந்ததும் அந்த அமைப்பு உடைந்து விட்டது.
இப்போது அதிகாரம் பல கீழ்நிலை அதிகாரிகளுக்கு பரவி இருக்கிறது. குறிப்பாக இந்த அதிகாரம் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் அதிகமாக உள்ளது.'' என பிபிசி ரேடியோ 4-ன் டுடே நிகழ்ச்சியில் அவர் கூறினார்.
யார் மீது ஏவுகணைகளை வீச வேண்டும் என்பதை ஒருங்கிணைக்க ஒரு "மைய நபர் இல்லை" என்று அவர் மேலும் கூறினார்.
அரசு நிர்வாகத்திற்குத் களத்தில் அதிகாரம் இல்லை என்றும், அதனால் இப்போது புதிய அளவிலான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள ராணுவ அதிகாரிகளைக் கண்டு அது பயப்படுவதாகவும் அமிரஹ்மதி கூறுகிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!