அமெரிக்காவிலிருந்த வந்த வேந்தனுக்கு (ஒபாமா) மோடி தேனீர் ஊற்றிக் கொடுத்ததை பெருமை கொள்ளும் இந்தியா!
ஐயோ! ஐயோ! “அமெரிக்க ஜனாதிபதிக்கு மோடி தேனீர் ஊற்றிக்கொடுத்தது தான் இந்தியாவில் மிகப்பெரிய செய்தியாக இந்திய ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரை சந்திப்பதுதான் மோடிக்கு அதியுயர் இலச்சியமாக இருந்திருக்கும். அதிலும்… அமெரிக்க அதிபருக்கு தன் கையால் மோடி பணிவிடை செய்வதென்பது மோடிக்கு கிடைத்த அரும்பெரும் பாக்கியமல்லவா!
அமெரிக்காவிலிருந்து ஒபாமா எப்பொழுது வெளிகிட்டாரோ… அவர்கள் (ஒபாமா, மிஷல் ) விமானத்தில் படியேறுகிறார்கள் என்பதிலிருந்து.. இந்தியா வந்து காலடி வைத்ததிலிருந்து அவர்களின் நடையுடை, பாவனைகள், உண்ணும் உணவுகள், பேசும் தரணங்கள், உதிர்க்கும் வார்த்தைகள் … என்பன பற்றியதான செய்திகள் இந்திய ஊடகங்கள் முழுவதிலும் பரவலாக ஆக்கிரமித்துள்ளன.
ஏதோ தேவலோகத்திலிருந்து உதித்தவர் போல்… அமெரிக்க ஜனாதிபதியை இந்தியர்கள் பார்க்கின்றார்கள். அமெரிக்க ஜெனாதிபதி தம்பதிகளின் மலசலங்களைக் கூட கோப்பையில் ஏந்துகின்றார்களோ தெரியவில்லை??
ஆண்டுகள் .. ஆயிரம் சென்றாலும் அடிமைதன மனோநிலையிலிருந்து இந்தியர்கள் மாறமாட்டார்கள் என்பதைதான் இது எடுத்துக்காட்டுகின்றது.
இந்திய இணைய தளமொன்றில் பார்த்த செய்தியிது…


கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!