இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
இந்த விபத்திற்குக் காரணமான காவல் அதிகாரி கெவின் டேவ் மற்றும் மாணவியின் மரணத்தை ஏளனம் செய்த டேனியல் ஆடரர் ஆகிய இருவரும் காவல் துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வாகனத்தை ஓட்டியவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதுடன் 5 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனிடையே, போலீஸ் அதிகாரி மீதும், நகர நிர்வாகம் மீதும் 2004 ல் 110 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
" ஜான்வி ஒரு புத்திசாலி மாணவி என்றும், அவரது எதிர்காலம் மிகக் கொடூரமான முறையில் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வாதிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மற்றும் நகர வழக்கறிஞர் அலுவலகம், தற்போது 29 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளன.
அதாவது, ஜானவி கண்டுலா குடும்பத்துக்கு 262 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளதால் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
இந்தத் தொகையில் பெரும் பகுதியை சியாட்டில் நகரத்தின் காப்பீட்டு நிறுவனம் வழங்கும் என்றும், மீதமுள்ள தொகையைச் சியாட்டில் மாநகராட்சி நேரடியாக வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீடு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சியாட்டில் நகர வழக்கறிஞர் எரிகா எவன்ஸ், ஜானவி கண்டுலாவின் மரணம் மிகவும் வருத்தத்துக்கு உரியது.
அவரது உயிர் அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் மற்றும் சமூகத்திற்கும் மிகவும் முக்கியமானது என்பதைத் நாங்கள் அங்கீகரிக்கிறோம். இந்த நிதி உதவி மாணவியின் குடும்பத்திற்கு ஒரு சிறிய ஆறுதலாகவும், அவர்களின் துயரத்திலிருந்து மீண்டு வர உதவியாகவும் இருக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.
உயிரிழந்த ஜான்விக்கு அவர் பயின்ற பல்கலைக்கழகம் கௌரவ முதுகலைப் பட்டம் வழங்கி சிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!