அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லொடி நகரில் உள்ள குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த குடியிருப்பு பகுதியில் சிலர் ஆயுதங்களுடன் இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குடியிருப்பு பகுதிக்கு சென்ற பொலிஸார் ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அந்த வீட்டில் பதுங்கி இருந்த நபர்கள் பொலிஸார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பொலிஸார் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
அதில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளதோடு, 4 பொலிஸார் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய ஒரு நபர் உயிரிழந்தார்.
மேலும் ஒருவர் தப்பியோடினார். இதையடுத்து, தப்பியோடிய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!