கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் சுமார் 2,000க்கும் அதிகமானோர் அமெரிக்காவில் கொரோனாவால் பலியாகி வருகின்ற நிலையில் நேற்று ஒரே நாளில் 2137 பேர் மரணித்துள்ளனர்.
மிக மோசமாக நியூயோர்க் நகரில் தான் 16,106 பேர் பலியாகியுள்ளனர். இங்கு மட்டும் 2,26,198 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவை தொடர்ந்து இத்தாலியில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 22,170 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், ஸ்பெயினில் 19,315 பேரும் பிரான்ஸில் 17,920 பேரும் கொரோனா காவு கொண்டுள்ளது. இங்கிலாந்தில் 13,729 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.
அத்தோடு, ஈரானில் 4,869, ஜெர்மனியில் 4,052, பெல்ஜியத்தில் 4,857 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 1,45,507 ஆகவும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,81,758 ஆகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விரைவில் பாரிஸ் 'ஒரு முஸ்லிம் நகரமாக மாறிவிடும்' -என்ற டொனால்ட் டிரமின் கருத்து முட்டாள் தனமானது! மக்ரோங் விமர்்சனம்
22 Oct, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!