news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அமெரிக்காவில் 4 பேரை சுட்டுக்கொன்ற பள்ளி மாணவன்

05 Sep, 2024
"அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் 2 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் என அடையாளம் காணப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். போலீசார் விசாரணையில் 4 பேரை சுட்டுக்கொன்றவர் 14 வயது மாணவர் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இப்போது நடந்துள்ள சம்பவத்தில் சிறுவனே கொலைகாரனாக மாறி இருப்பது பெரும் வேதனை அளிப்பதாக, அந்நாட்டு கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.",

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!